Load Image
Advertisement

போதைப் பழக்கத்திற்குத் தீர்வு!

மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய விஷயம் போதைப் பழக்கம்.

இப்பழக்கத்திலிருந்து, குறிப்பாக 'கொகைன்' பழக்கத்திலிருந்து மீள்வதற்கு, குடல் நுண்ணியிரிகள் உதவும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நம் உடலில் ஏராளமான பயன் தரும் பாக்டீரியா, பூஞ்சைகள் உள்ளன. குறிப்பாக குடலில் இவை அதிகளவில் காணப்படுகின்றன. இவை நோய்களிலிருந்து காத்தல், அவசியமான சத்துகளை உறிஞ்சுதல் முதலிய முக்கிய உதவிகளை உடலுக்குச் செய்து உடல், மன நலனைக் காக்கின்றன.

அமெரிக்காவின் வேக் பாரஸ்ட் மருத்துவப் பல்கலையை சேர்ந்த விஞ்ஞானிகள் எலிகளுக்கு ஆன்டிபயாடிக்குகள் கொடுத்து, அவற்றின் உடலில் இருந்த நல்ல பாக்டீரியாவை அழித்தனர். பின்பு அவற்றைக் 'கொகைன்' போதைப் பொருளுக்குக் பழக்கினர். அவை போதைக்கு அடிமையான பின்னர் மீண்டும், மீண்டும் 'கொகைனை' நாடின.

அடுத்ததாக, எலிகளில் ஆன்டிபயாடிக்குகள் வீரியத்தைக் குறைக்கும் கொழுப்பு அமிலங்களைச் செலுத்தினர். எலிகளின் உடலில் பாக்டீரியாவின் எண்ணிக்கை கூடக்கூட, போதைக்கான அவற்றின் தேடல் குறைவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆராய்ச்சி முடிவைத் துவக்கமாகக் கொண்டு மனிதர்களுக்கு எந்த வகையான பாக்டீரியாவைக் கொடுத்தால் போதையில் இருந்து மீள முடியும் என்ற ஆய்வைத் தீவிரப்படுத்த உள்ளனர் விஞ்ஞானிகள்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement