Load Image
Advertisement

அழிந்துபோன ராட்சத விலங்கு!

உலகில் இதுவரை வாழ்ந்த, வாழும் உயிரினங்களிலேயே மிகப் பெரியது நீலத் திமிங்கிலங்கள் தான் என்று அறிவோம். இவை டைனாசர்களை விட பெரியவை. நுாறு அடி நீளம் கூட வளர்பவை, 150 டன், அதாவது 30 யானைகளின் எடையை உடையவை. இவற்றின் நாக்கு மட்டுமே ஒரு யானையின் எடைக்குச் சமமானது.

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு விலங்கின் தொல்லெச்சத்திலிருந்து, அவை நீலத் திமிங்கிலங்களை விட பெரியவையாக இருந்துள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவில் உள்ள 'ஐசி' பள்ளத்தாக்கில், ஆய்வாளர்கள் 13 ராட்சத தண்டுவட எலும்புகளையும், 4 நெஞ்செலும்புகளையும், ஓர் இடுப்பு எலும்பையும் கண்டெடுத்துள்ளனர்.

இவை 3.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு வகை திமிங்கிலங்களுடையவை என்று கணித்துள்ளனர். இத்திமிங்கிலத்திற்கு 'பெருசிடஸ் கொலோசஸ்' என்று பெயரிட்டுள்ளனர். இந்த எலும்புகளை இப்போது வாழும் உயிரினங்களின் எலும்புகளோடு ஒப்பிட்டு, இவை 65.6 அடி நீளம் வளர்ந்திருக்கக் கூடும் என்றும், 340 டன் வரை எடை கொண்டவையாக இருந்திருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நீலத் திமிங்கிலங்களின் அதிகபட்ச எடை 200 டன். ஆகவே இவை நீலத்திமிங்கிலங்களை விட பெரியவையாக இருந்துள்ளதாக தெரிகிறது.

இன்றுள்ள திமிங்கிலங்களை விட இவற்றின் எலும்புகள் அடர்த்தியாகவும், கனமாகவும் உள்ளன என்பதால் இவற்றால் கரைகளை ஒட்டிய பகுதிகளில் சுலபமாக நீந்த முடிந்திருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement