Load Image
Advertisement

அறிவியல் துணுக்குகள்!

* ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு பல்கலைக்கழகம், பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில், குழந்தை பிறந்து 6 முதல் 12 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது அம்மாக்களின் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், கெட்ட கொழுப்பு, வகை 2 நீரிழிவு, இன்சுலின் குறைபாடு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவது குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* அமெரிக்காவின் நாசாவால் 1977ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட வாயேஜர் 2 விண்கலம், பூமியிலிருந்து 1990 கோடி கி.மீ., துாரத்தில் இருந்தபோது, அங்கிருந்து ரேடியோ அலைகள் பூமியை அடைய 18 மணி நேரம் 21 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. ஆனால், தற்போது விண்கலம் இயங்கிக் கொண்டிருந்தாலும் கூட, நாசாவால் விண்கலத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

* காட்டுத்தீ ஏற்பட்டவுடன் அதைப் பரவாமல் கட்டுப்படுத்த, முதன்முறையாக பானோ ஏஐ (Pano AI) எனும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது அமெரிக்காவின் 6.2 ஏக்கர் காடுகளைக் கேமராக்களின் துணையோடு கண்காணிக்கிறது.

* ஹாங்காங்கில் உள்ள சீனப் பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பாக்டீரிய செல்லுலோஸைப் பயன்படுத்தி ப்ளாஸ்டிக் தயாரித்துள்ளனர். இவை மிருதுவாக இருந்தாலும் லேசில் கிழியாது, ஆனால், எளிதில் மக்கும். சுற்றுச்சூழலைப் பாதிக்காது. ஒருமுறை பயன்படுத்தித் துாக்கி எரியும் பைகளுக்கு இவற்றைப் பயன்படுத்த முடியும்.

* சீனாவின் ஹைனான் தீவை பூர்விகமாகக் கொண்ட மல்லோடஸ் புரெடியானஸ் தாவரத்தில், கெட்ட கொழுப்புகளை அழிக்கும் பண்பு உள்ளதை ஜப்பானின் ஒசாகா பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலிகளிடையேயான சோதனையில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதை அடுத்து, மனிதர்களில் உடல் பருமன், கொழுப்பு கல்லீரல் நோயைச் சரி செய்ய இத்தாவரத்தைப் பயன்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement