Load Image
Advertisement

திமிங்கலங்களுக்காக 'லைவ்' வீடியோ!

மனிதர்கள் உருவாக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் ஏராளமான உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. உலக வெப்பமயமாதலால், வடதுருவமான 'ஆர்டிக்' பகுதிகளில் அதிகமான பனிக்கட்டி உருகுகின்றன.

இதனால், அங்கு வாழும் பெலுகா திமிங்கலங்கள் கோடைக் காலங்களில் கனடாவின் ஹுட்ஸன் வளைகுடா பகுதிக்குக் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றன. 15 அடி நீளமும், 1,500 கிலோகிராம் எடையும் கொண்ட இந்தச் சிறிய வகை திமிங்கலங்களின் தலை, வித்தியாசமாக வீங்கி இருக்கும்.

இவை கடலில் வேட்டையாடும் போது, தனித்துவமான ஒலிகளை எழுப்பி தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. பனிக்கட்டிகளில் வளரும் பாசிகளே, சிறு மீன்களது முக்கிய உணவாகும். இந்த மீன்கள் தான் பெலுகா திமிங்கலங்களின் உணவு.

அது போக, இந்தத் திமிங்கலங்கள் தங்கள் எதிரிகளிடமிருந்து ஒளிந்துகொள்ளவும் பனிக்கட்டிகள் உதவுகின்றன. பனி உருகுவது இத்திமிங்கலங்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது.

'போலார் பியர்ஸ் இன்டர்நேஷனல்' என்ற சுற்றுச்சூழல் அமைப்பு, இந்தத் திமிங்கலங்கள் இடம்பெயரும் போது அவற்றை 'லைவ்' வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இதன் வாயிலாக, புவி வெப்பமயமாதலால் விலங்குகளுக்கு ஏற்படும் இன்னல்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த அமைப்பின் நோக்கம் ஆகும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement