Load Image
Advertisement

அல்சைமருக்கு மருந்து!

அல்சைமர் நோய்க்குக் காரணமான புரதக் கட்டிகளான 'அமிலாய்டு பிளேக்'குகளைக் கட்டுப்படுத்துவதற்கு, 'ஹைட்ராஞ்சியா' தாவரத்தின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு பொருள், சிறந்த மருந்தாக இருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

அல்சைமர் நோயைக் கட்டுப்படுத்தவும், அது தீவிரமடையும் வேகத்தைக் குறைக்கவும் தேவையான சிகிச்சைகளை உருவாக்குவதில் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தென் கொரியாவின் சாஹ்மியோக் பல்கலை ஆய்வாளர்கள் இப்புதிய மருந்தைக் கண்டறிந்துள்ளனர்.

ஆசிய நாடுகளில் உலர்ந்த 'ஹைட்ராஞ்சியா' இலைகள் மருத்துவ தேநீர் தயாரிக்கப் பயன்படுகின்றன. 'ஹைட்ராஞ்சியா' தாவரத்தில் காணப்படும் 'பைலோடூல்சின்' எனும் வேதிப்பொருள் ஓர் இயற்கை இனிப்பு. சுக்ரோஸை விட 400 முதல் 800 மடங்கு இனிப்பானது.

'பைலோடூல்சின்' மூளையில் 'அமிலாய்டு பீட்டா' புரதப் படிதலைத் தடுக்கக்கூடும் என்பதை சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆய்வாளர்கள் எலிகளில் 'அமிலாய்டு பிளேக்'குகளை உருவாக்கினர். எலிகளுக்கு ஒரு மாதத்திற்கு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை 'பைலோடூல்சினை' வாய்வழியாகக் கொடுத்தனர்.

எலிகளில் 'பைலோடூல்சின்' மருந்து, 'அமிலாய்டு பீட்டா' படிவதைத் தடுக்கிறது என்பதைக் கண்டறிந்தனர்.

'பைலோடூல்சினை' அடிப்படையாகக் கொண்ட ஒரு முழுமை பெற்ற சிகிச்சையை 20 ஆண்டுகளுக்குள் உருவாக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.



வாசகர் கருத்து (1)

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    டூ ஜி ஊழல் பாட்டிக்கு உடனே இந்த மருந்தை ரெடி பண்ணி கொடுங்க .....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement