Load Image
Advertisement

ஒரே பாதையில் இரு கோள்கள்?

பூமியைப் போலவே, ஒரு கோள் பூமியின் சுற்றுவட்டப் பாதையிலேயே சுற்றி வருவதாகவும், மிகச் சரியாக பூமியிலிருந்து 180 டிகிரியில் இருப்பதால் சூரியனுக்குப் பின்னால் மறைந்திருப்பதாகவும், அதனால் நம்மால் அதைப் பார்க்க முடியவில்லை என்றும், கற்பனையான கருத்துக்களை நீங்கள் அறிவியல் புனைகதைகளில் படித்திருக்கலாம்.

இந்தக் கற்பனை வேறு ஒரு நட்சத்திர மண்டலத்தில் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதி வந்தனர். ஒரே சுற்று வட்டப்பாதையைக் கொண்டிருக்கும் இரு கோள்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்போது பூமியிலிருந்து 370 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பி.டி.எஸ் 70 என்ற சிறிய நட்சத்திரத்தை பி.டி.எஸ் ௭0b என்ற ஒரு கோள் சுற்றிவருகிறது.

இதன் அருகே, நம் நிலவைப் போன்று இரு மடங்கு நிறையை உடைய தூசு மேகங்களுடனான கோள் ஒன்று உள்ளது.

இது உருவாகிக் கொண்டிருக்கும் கோளாகவோ, உருவான கோளைச் சூழ்ந்துள்ள தூசாகவோ இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்த இரு கோள்களும் ஒரே பாதையில் தான் சுற்றுகின்றனவா என்பதை 2026ஆம் ஆண்டு இவை விலகிச் செல்லும்போது தான் உறுதிப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement