மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: அ.தி.மு.க., ஆட்சியில் மருத்துவ துறையில், புதிய திட்டங்களை கொண்டு வராமல், அரைத்த மாவையே அரைத்தனர். காய்ச்சல் மற்றும் தொற்றா நோய்களுக்கு, 171 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து, மாத்திரை, ஊசிகள் கையிருப்பில் உள்ளன. இதுபற்றி அறியாமல், தேர்தல் தோல்வி பயத்தில், பழனிசாமி இல்லாதவற்றை பேசுகிறார்.
டவுட் தனபாலு: உலகத்துக்கே புதிய வரவான கொரோனா தொற்றை, அ.தி.மு.க., ஆட்சியினர் தானே சிறப்பா எதிர்கொண்டாங்க... அவங்க அறிமுகம் செய்த, 'அம்மா மினி கிளினிக்' திட்டத்துக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியில மூடுவிழா நடத்திய நீங்க, அவங்களை குறை சொல்வது பக்கா அரசியல் என்பதில், 'டவுட்'டே இல்லை!
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., செயலர் கார்த்திக்: அனைத்து அரசு அலுவலகங்களிலும், முதல்வர் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுக்கடைகளில் மட்டும், ஏன் முதல்வர் படம் வைக்கப்படுவதில்லை? திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும், முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் படத்தை வைக்க வேண்டும்.
டவுட் தனபாலு: சின்னதா, 100 சதுர அடியில இருக்கிற வி.ஏ.ஓ., அலுவலகத்துல கூட கருணாநிதி, ஸ்டாலின் படங்களை மாட்டி வச்சிருக்காங்க... அப்படி இருக்கிறப்ப, அரசுக்கு, 50,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தர்ற, டாஸ்மாக் கடைகள்லயும், அவங்க படங்களை வைக்கணும் என்பதில் எந்த, 'டவுட்'டும் இல்லை!
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி: தமிழகத்தை மது பழக்கம் இல்லாத மாநிலமாக மாற்ற, புதிய தமிழகம் மூன்று மாதங்களாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. ஆக., 15 முதல், கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்ய உள்ளோம். மதுவுக்கு எதிராக, நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். விரைவில், அவரை நேரில் சந்தித்து,மது ஒழிப்பு விழிப்பு பிரசார துாதுவராக செயல்பட அழைப்பு விடுக்க உள்ளேன்.
டவுட் தனபாலு: 'என்னை வாழ வைத்த தெய்வங்கள்'னு அடிக்கடி தமிழக மக்களை புல்லரிக்க வைக்கிற ரஜினி, அவங்களுக்கு ஏதாவது செய்ய நினைச்சா, மது ஒழிப்பு பிரசாரத்தில் தீவிரமாக களம் இறங்கணும்... அப்படி செய்தா, 'டவுட்'டே இல்லாம அவரை பாராட்டலாம்!
'மதுப்பிரியர்களின் குலதெய்வம்