அறிவியல் ஆயிரம்:பெரிய எரிமலை
அறிவியல் ஆயிரம்
பெரிய எரிமலை
சூரிய குடும்பத்தில் பூமியை போல மற்ற கோள்களிலும் எரிமலைகள் உள்ளன. செவ்வாய் கிரகத்தில் உள்ள எரிமலை 'ஒலிம்பஸ் மான்ஸ்'. இதுதான் சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய எரிமலை. உயரத்தில் பூமியின் உயரமான சிகரம் எவரெஸ்டை (29,029 அடி) விட 2.5 மடங்கு பெரியது. இதன் உயரம் 72,000 அடி. இவ்வளவு பெரிதாக இருந்தாலும் மற்ற எரிமலைகளோடு ஒப்பிடும்பொழுது இதன் வயது குறைவு. 1971ல் செவ்வாய் கோளுக்கு சென்ற நாசாவின் 'மரைனர் 9' விண்கலம் இந்த எரிமலையை கண்டுபிடித்தது. கடைசியாக 20ம் நுாற்றாண்டில் இந்த எரிமலை குழம்பை கக்கியது.
தகவல் சுரங்கம்
பேசும் ஓவியம்
உலகில் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்று 'மோனலிசா'. இது பேசும் ஓவியம் எனவும் அழைக்கப்படுகிறது. இதை வரைந்தவர் இத்தாலியின் லியனார்டோ டா வின்சி. இதற்கு அவர் முதலில் வைத்த பெயர் மடோனா லிசா. அதன் சுருக்கமே மோனலிசா. இது ஆயில் பெயின்டிங் கொண்டு வரையப்பட்டது. கி.பி. 1503 - 1506க்குள் வரையப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது ஒரு பெட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டு, பின் மீண்டும் காட்சிக்கு வைக்கப் பட்டது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் மோனலிசா ஓவியம் கண்காட்சியில் வைக்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!