பறவை கூண்டில் புகுந்த பாம்பு
சேலையூர்,
சேலையூரை சேர்ந்தவர் சையத். இவர் வீட்டில், கம்பி கூண்டில், 'லவ் பேட்ஸ்' பறவைகளை வளர்த்து வந்தார். நேற்று காலை, கூண்டில் இருந்த பறவைகள், வழக்கத்திற்கு மாறாக கத்திக்கொண்டே இருந்தன. சையத் சென்று பார்த்தபோது, கூண்டிற்குள் பாம்பு ஒன்று பதுக்கியிருந்தது.
உடனடியாக, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, கூண்டில் பதுங்கியிருந்த பாம்பை பிடித்து சென்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!