நம் நாட்டில், ஹிந்து மதத்தினர் பெரும்பான்மை யாகவும், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பிற மதத்தினர் சிறுபான்மை யாகவும் உள்ளனர். திருமணம், விவாகரத்து, சொத்துப் பங்கீடு தொடர்பான சட்டங்கள் எல்லாம், ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளன.
இப்படி தனித்தனியாக சட்டங்கள் இருப்பது, அரசு நிர்வாகத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவதாக மத்திய அரசு கூறி வருகிறது. அதனால், நாட்டிலுள்ள அனைத்து சமூக மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்த, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், தான் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் எல்லாம், பொது சிவில் சட்டம் அவசியமானது என, பிரதமர் மோடியும் வலியுறுத்தி வருகிறார். அதேநேரத்தில், இந்தச் சட்டத்திற்கு எதிராக, சிறுபான்மையினரை எதிர்க்கட்சிகள் துாண்டி விடுவதாகவும் குற்றம் சாட்டி வருகிறார்.
அத்துடன், 'ஒரு வீட்டில் ஒரு நபருக்கு ஒரு விதிமுறை, மற்றொரு நபருக்கு வேறு விதிமுறை என்று இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்கள் எப்படி சுமூகமாக செயல்பட முடியும்?' என்றும், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி கூறினார்.
ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ, 'பொது சிவில் சட்டத்தை அமல்படுத்து வதன் வாயிலாக, மக்களை பிளவுபடுத்த, பா.ஜ., அரசு முற்பட்டுள்ளது. ௨௦௧௯ லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றவுடன், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சட்டத்தின், ௩௭௦வது பிரிவை, பா.ஜ., அரசு ரத்து செய்தது.
அதன்பின், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை முடுக்கி விட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளது' என, விமர்சித்து வருகின்றன.
இதற்கிடையில், சர்ச்சைக்குரிய இந்தப் பொது சிவில் சட்டம் தொடர்பாக, பொதுமக்கள், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்கும் பணியில், மத்திய சட்ட ஆணையமும் ஈடுபட்டு உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பையும், சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்த்தாலும், ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் போது, அது மதத்தை அடிப்படையாகக் கொண்ட, தனி நபர் சட்டங்களை பாதிக்கும்.
அதாவது, விவாகரத்து, திருமணம், தத்தெடுப்பு, வாரிசுரிமை போன்றவை தொடர்பான விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
அது பலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதக மாகவும் அமையலாம். அது மட்டுமின்றி, தனிநபர் சட்டங்கள் பல நியாயம் அற்றவையாகவும், மக்களை சமமற்ற முறையில் நடத்துவதாகவும் விமர்சனங்கள் உள்ளன.
எனவே, பொது சிவில் சட்டம் அவசியம் என்று கூறப்படுகிறது. மேலும், பொது சிவில் சட்டம் அமலானால், அது மதச்சார்பின்மையை மேலும் ஊக்கப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
அரசியல் சட்டத்தின், 25வது பிரிவானது, மக்களின் மத சுதந்திரத்தை உறுதி செய்கிறது. அந்த மத சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாமலும், பல்வேறு மதங்களில் பின்பற்றப்படும், பிற்போக்கான நடைமுறைகளை ஒழிப்பதாகவும், அனைவருக்கும் நியாயமான தீர்வு கிடைக்கும் வகையிலும், பொது சிவில் சட்டம் அமைய வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
அப்போது தான், அது சரியான சட்டமாகவும் இருக்க முடியும். எனவே, பொது சிவில் சட்டத்தை இறுதி செய்யும் முன், அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும். அதன்பின்னரே அது இறுதி செய்யப்பட வேண்டும். அதை, மத்திய பா.ஜ., அரசு செய்யும் என, நம்புவோமாக.
இந்த சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்கிற வாதமே அபத்தம் ஜாதிப் பிரிவுகளே இல்லாத மதங்கள் என்று சாதிக்கின்ற/வாதிக்கின்ற இஸ்லாம், கிறிஸ்தவ மத மக்கள் - முறையே ஏறக்குறைய 3 மற்றும் 21 கோடிகள், என்று கொள்ளலாம். ஏறக்குறைய 109 கோடி மக்கள் இந்துக்கள் என்றே வைத்துக்கொள்வோம். இந்த இந்துக்களில்தான் எத்தனை ஜாதிப்பிரிவுகள்? மதப்பிரிவுகள்? இதிலே ஒவ்வொரு மதமுமே ஜாதியுமே 1% க்கும் குறைவாகத்தானே இருக்கும். அப்படிப்பார்த்தால், ஒரே கடவுளைக் கும்பிடுகிற இஸ்லாமியரை கிறிஸ்தவரை விட, மதத்துக்குள்ளேயே வெவ்வேறு தெய்வங்களை மட்டுமே கும்பிடுகிற, ஜாதிகளை மட்டுமே கொண்டாடுகிற எல்லோருமே சிறுபான்மையினர்தான். குல, ஜாதி, வழிபடுகிற தெய்வங்கள் என்று பிரிந்திருக்கிற இந்துக்கள் என்ற "அடையாளப்படுத்தப்பட்டு" இந்த பிளவுகளை வைத்து அரசியல் செய்கிற அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானாலும், இந்துக்கள் தேவைப்படும்போது பெரும்பான்மையாகவும், மற்ற நேரங்களில் சலுகைக்களுக்காக ஜாதிகளாகவும் தெரியலாம்.. யார் சிறுபான்மை? யார் பெரும்பான்மை? உண்மையிலேயே... கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை 2% அல்லது சற்று மேலாக இருக்கலாம் என்றே வைத்துக்கொண்டாலும், அவர்களுக்குத்தான் எத்தனை சர்ச்சுகள் நாட்டிலே..? இதிலே சலுகைகளுக்காக ஜாதி இந்துக்களாகவும், ஆனாலும் உண்மையிலே கிறிஸ்தவர்களாகவும் மதம் மாற்றம் செய்யப்பட்டவர்கள் எத்தனைப்பேர் என்ற கணக்கு இல்லவே இல்லை. 2. இந்தியாவில் 30 கோடி மக்கள்தான் 1947-ல்.. இன்று ஏறக்குறைய 21 கோடி முஸ்லீம்கள் மட்டுமே இருக்கிறார்கள்.. இதிலிருந்து 75 வருடத்துக்குள் இந்த வளர்ச்சி... இன்னும் 75 வருடத்துக்குள் 4.5 கோடி (அதே 15% என்று வைத்துக்கொண்டாலும்) 21 கோடியானது என்றால், இன்னும் 75 வருடத்துக்குள் எவ்வளவு ஆகும் என்று கணக்குப் போட்டுப்பார்த்தால் இதுவே குறைந்தபட்சம் 150 கோடிகூட ஆகலாம்.. இந்த 4.5 கோடிகூட பாகிஸ்தான் என்று பெரும்பாலான இஸ்லாமியர்கள் பிரிந்து சென்ற பிறகு... இப்போதே தமிழ் நாட்டில் மேல்விஷாரம், கோவை, கேரளாவில் சில இடங்கள், ஹைதராபாத் மற்று இந்தியாமுழுக்க ஆங்காங்கு சிறுபகுதிகளில் இசுலாமியப் பெரும்பான்மையினர் செய்யும் வன்முறைகளைப் பார்க்கிறோம்.. சிறுபான்மையினர் என்ற போர்வையில் எத்தனைக் குண்டு வெடிப்புகள், வன்முறைகள்... இன்னும் பொதுச் சிவில் சட்டம் வரவில்லையானால் இந்தியா பல இஸ்தான்களாகப் பிரிந்து 2147க்குள் மீண்டும் சிறு சிறு தேசங்களாக அதுவும் இந்து விரோத அரசுகளாக ஆகிவிடும் என்று இனியும் யாராவது சந்தேகப்படலாமா?