காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னிதி தெரு, பழைய ரயில் நிலையம் அருகில் குடிநீர் தொட்டி உள்ளது.
குடிநீர் தொட்டிக்கு நீரை நிரப்புவதற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை குழாயில் இருந்து தொட்டிக்கு நிலத்தடி வழியாக செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரு வாரங்களுக்கு மேலாக குடிநீர் சாலையில் வழிந்தோடியது.
இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ஆழ்துளை மெயின் குழாயில் ஏற்பட்ட உடைப்பு மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!