கடந்த 12,13-7-86 ம் ஆண்வு மதுரையில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடந்தது.
அந்த இரண்டு நாள் மாநாட்டில் ஏகப்பட்ட தீர்மானங்கள்,தலைவர்களின் உரை வீச்சுக்கள் என்று நிறைய விஷயங்கள் நடந்தேறினஆனால் அந்த விஷயங்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளியது, எம்.ஜி.ஆருக்கு,ஜெயலலிதா வெள்ளி செங்கோல் கொடுத்த விஷயம்தான்.
அது போல 65 ஆயிரம் சதுர மீட்டரில், 1200 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய பராளுமன்ற கட்டிடத்தில், என்ன, என்ன வசதிகள் இருக்கிறது, என்ன,என்ன சிறப்புகள் இடம் பெற்றிருக்கின்றன என்பதைவிட, அதன் திறப்பு விழாவின் போது பிரதமர் நிறுவிய தமிழகத்தின் செங்கோல்தான் முக்கிய செய்தியாகி உள்ளது.இத்தனைக்கும் காரணம் ஒரு புகைப்படம் என்பதுதான் இதில் உள்ள முக்கியத்துவமே
ஆம்,கடந்த 2018 ம் ஆண்டு திருவாடுதுறை ஆதினத்திற்கு சென்ற பக்தர் ஒருவர்,நாட்டின் முதல் பிரதமரான நேருவிடம், ஆதினமடத்தைச் சேர்ந்த ஒருவர் செங்கோல் கொடுப்பது போல இருந்த ஒரு பழைய படத்தைப் பார்த்துவிட்டு விவரம் கேட்டுள்ளார்.
நாடு சுதந்தரம் அடைந்த போது இதை எப்படி அடையாளமாக்குவது என்பது குறித்து நேரு ராஜாஜியிடம் ஆலோசனை கேட்க,அதிகார மாற்றத்தின் போது ராஜாக்கள் தங்கள் செங்கோலை புதியவர்களிடம் ஒப்படைப்பார்கள் அது போல புதிய மாற்றத்திற்கான அடையாளமாக செங்கோலை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
நேருவும் சரி என்று சொல்ல, ராஜாஜியின்ஏற்பாட்டில் திருவாடுதுறை ஆதினத்தில் சார்பில் தங்கமுலாம் பூசப்பட்ட செங்கோல் செய்யப்பட்டு அது தனி விமானத்தில் டில்லி கொண்டு செல்லப்பட்டது பின் நேருவிடம் வழங்கப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்த போது நடந்த பிரிவினை குழப்பம் காரணமாக, இந்த செங்கோல் நிகழ்ச்சி சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை.நிகழ்வின் போடு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் அது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியும்தான் ஆவணம்.
அந்தப்படம்தான் இப்போதும் ஆதீன மடத்தில் உள்ளது. அந்த படத்தை 'ரீகாப்பி' செய்து எடுத்த பக்தர் ஒருவர் அதை ஒரு இணைய பத்திரிகைக்கு அனுப்ப, அந்த செய்தியும்,படமும் வைரலானது.அந்தச் செய்தியில் இந்த செங்கோல் சென்னை 'உம்மிடி' நகைக்கடையில் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதைப்படித்த ' உம்மிடி' குடும்ப இளைய உறுப்பினர்களுக்கு, இப்போது இந்த செங்கோல் எங்கே? எந்த நிலமையில் இருக்கிறது? என்பதை அறியும் ஆவல் ஏற்பட்டது,அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் தேடிச்சென்றனர்.
உ.பி.,அலகபாத்தில் (இன்றைய பிரயாக்ராஜ்) உள்ள நேருவின் இல்லமாக இருந்து தற்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்ட இடத்தில், இந்த செங்கோல் இருப்பதை அறிந்தனர்,அங்கு போய் பார்த்த போது 'நேரு உபயோகித்த கைத்தடி' என்ற குறிப்புடன் அந்த செங்கோல் ஒரு கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு இருந்ததையும் பார்த்து வேதனை அடைந்தனர்.
ஐயா..இது கைத்தடி இல்லை, நாடு சுதந்திரம் பெற்றதன் அடையாளம் என்று விளக்கிவிட்டு, கண்டோம் செங்கோலை என்று விரிவாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
இந்த வீடியோ பிரதமர் மோடி அலுவலகத்தின் பார்வைக்கு சென்றது, இதன் உண்மைத்தன்மை விசாரிக்கப்பட்டு, நடந்தது அனைத்தும் உண்மைதான் என்று உணர்ந்த பின் பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இத்துணை சிறப்பு மிக்க செங்கோல் ஜனநாயகத்தின் கோவிலான புதிய பாராளுமன்றத்தில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இருக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
நாட்டுப்பற்றுடன் செங்கோலை வழங்கிய தமிழக ஆதீனங்களை கவுரவிக்கவும்,அதனை உடனடியாக செய்து வழங்கிய 'உம்மிடி' குடும்பத்தாரை கவுரவிக்கவும் பிரதமர் விரும்பினார்.
அவரது விருப்பத்தின் அடிப்படையில் தனி விமானத்தில் தமிழக ஆதினங்கள் இருபத்து ஐந்து பேரும்,'உம்மிடி' குடும்பத்தினர்பதினைந்து பேரும் சென்றிருந்தனர். அவர்களை தனது இல்லத்திற்கே நேரில் வரவழைத்த பிரதமர் அனைவரையும் கவுரவித்து மகிழ்ந்தார். உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தின் மூத்த உறுப்பினரும் ,1947 ம் ஆண்டு வழங்கப்பட்ட செங்கோலை உருவாக்கியவர்களில் ஒருவருமான 97 வயது 'உம்மிடி'எத்திராஜூலுவும் அதில் ஒருவர்தமிழக ஆதீனங்கள் தங்கள் மடத்தின் சார்பாக புதிய செங்கோல்களை பரிசாகவும் வழங்கினர் அதுதான் பிரதமர் கையில் விதவிதமான செங்கோல்கள் இருக்க காரணம், புதிய பராளுமன்றத்தின் திறப்பு விழாவிற்கு முதல் நாள்,மறுநாள் என்று மூன்று நாள் அரசு விருந்தினராகக் கலந்து கொண்டு வந்த மகிழ்ச்சி இன்னும் பல காலத்திற்கு எங்களுக்கு இருக்கும் என்று சென்னை 'உம்மிடி' குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தங்கள் அனுபவத்தை பகிந்து கொண்டனர்.
.-எல்.முருகராஜ்
அனால் உங்க கும்பல் மவுண்ட் பட்டன் கையில் நேரு வாங்கின்னாரு என்று கொளுத்தி போது என்ன ஆச்சு ? chithambaram கோடா கேட்டாரே அதுக்கு பதில்லை காணோம் பொய் பொய் அனைத்திலும் பொய்