Load Image
Advertisement

நினைவாற்றலை அதிகரிக்கும் காளான்!

மனித மூளையில் உள்ள நியூரான்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, நினைவாற்றலை அதிகரிக்கும் சத்துக்களை இயற்கை உணவுகளிலிருந்து பெறுவது குறித்து, நீண்டகாலமாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள்,'ஹெரிசியம் எரினாசியஸ்' எனும் ஒருவகை காளானில் உள்ள சில சேர்மங்கள் இதற்கு உதவும் என, கண்டுபிடித்துள்ளனர். பல நுாறு ஆண்டுகளாக ஆசியாவின் பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகளில், இந்தக் காளான் பயன்பட்டு வருகிறது. இதனால் இதன் மருத்துவ குணங்களை விஞ்ஞானப்பூர்வமாக ஆராய ஆய்வாளர்கள் முற்பட்டனர்.

ஆய்வுக் கூடத்தில் பிரித்தெடுக்கப்பட்ட மூளை செல்கள் மீது, காளானில் உள்ள சேர்மங்கள் செலுத்தப்பட்டு, அதிக சக்திவாய்ந்த நுண்ணோக்கிகள் மூலம் கண்காணிக்கப்பட்டன. செலுத்தப்பட்ட சேர்மங்கள் நியூரான்களின் வளர்ச்சியையும், அவற்றுக்கு இடையேயான தொடர்புகளையும் ஊக்குவிப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

மூளை செல்கள் அழிவினால் ஏற்படும் 'அல்சைமர்' முதலிய நோய்களில் இருந்து காத்துக் கொள்ளவும், அவற்றுக்கு மருத்துவம் செய்யவும் இந்த ஆய்வுகள் பயன்படும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் 'நியூரோ கெமிஸ்ட்ரி' ஆய்விதழில் வெளிவந்துள்ளது.



வாசகர் கருத்து (2)

  • கால் தடம் பதி - bangalore, hsr layout,இந்தியா

    உண்மையில் பெரும்பாலான காடு சார்ந்த காளான் பல உபயோகங்களை உள்ளடக்கி உள்ளது ஆனால் அவற்றை கண்டுகொள்வதே மிகப்பெரிய வேலை, நீங்க இந்த கட்டுரையொடு அது எங்கெல்லாம் நீங்க கண்டெடுத்தீங்க என்று எழுதியிருந்தா உங்களை மெச்சியிருப்பேன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement