தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு: நமக்கு ஆளுங்கட்சி என்ற மரியாதை மட்டும் தான் உள்ளது; அதை, தி.மு.க., எப்போதும் இழந்து விடக்கூடாது. தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்காக, எத்தகைய யுக்தியையும் கையாள்வோம்.
டவுட் தனபாலு: ஓட்டுக்கு பணம் கொடுக்கறது... கற்பூரம் ஏத்தி சத்தியம் வாங்குறது... வாக்காளர்களை பட்டியில் அடைச்சி வைக்கிறதுன்னு, ஒவ்வொரு தேர்தலிலும், புதுப்புது யுக்தியை கையாண்டுட்டு தான் வர்றீங்க... அதே மாதிரி, எம்.பி., தேர்தலுக்கும் புதுசா ஏதோ யுக்தியை கண்டுபிடிச்சி, 'ரெடி'யா வச்சிருக்கீங்கன்னு உங்க பேச்சில் இருந்தே, 'டவுட்' இல்லாம தெரியுது!
காங்.,கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்: தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு கெடவில்லை. கள்ளச்சாராய மரணங்களை வைத்து, சட்டம் - ஒழுங்கு சரியில்லை என, கூற முடியாது. இருப்பினும், கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: கள்ளச்சாராய மரணம், ரொம்ப சாதாரண விஷயம்னு சொல்றீங்க... ஆனா, சட்டம் - ஒழுங்கு சீர்கேடுக்கு முக்கிய காரணமே, இந்த பாழா போன போதை பழக்கம் தான் என்பது, மத்திய அமைச்சராக இருந்த உங்களுக்கு தெரியாதா என்ற 'டவுட்' வருதே!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: துரை, அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என, ரகசிய ஓட்டெடுப்பு நடத்தினோம். ஓரிருவரை தவிர, பெரும்பாலானோர் வரவேற்றனர். இதை தாங்கிக் கொள்ள முடியாமல், துரையை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்த திருப்பூர் துரைசாமி, என் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்; அதில் எந்த உண்மையும் இல்லை. என் நாணயத்தை யாரும் குறை சொல்ல முடியாது.
டவுட் தனபாலு: உங்க மேல துரைசாமி சொன்ன குற்றச்சாட்டில், எது உண்மையோ, இல்லையோ... ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு நீங்க, 'ரவுண்டு' கட்டி வேலை பார்த்ததும், குறிப்பா, 2016 தேர்தலில் விஜயகாந்த் தலைமையில், மக்கள் நலக்கூட்டணி அமைத்து, ஸ்டாலினின் முதல்வர் கனவில் சடுகுடு ஆடியது, ௧௦௦ சதவீதம் உண்மை என்பதில், 'டவுட்'டே இல்லை!
அன்று சிறையில் அடித்தவர் கூட்டணிக்கு ஒட்டிக்கொண்ட இவர்தான் 'நாணயஸ்தர்'