சிவகாசி:தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி அருகே ஈஞ்சார் விலக்கிலிருந்து பர்மா காலனி செல்லும் ரோட்டில் சேதமடைந்த பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சிவகாசி ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு ஈஞ்சார் விலக்கில் இருந்து பர்மா காலனி செல்லும் ரோட்டில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக பாலம் போடப்பட்டது. ஈஞ்சார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீதிமன்றம், அரசு கல்லுாரி, வட்டார போக்குவரத்து அலுவலகம் இ.எஸ்.ஐ., மருத்துவமனை செல்வதற்கு பர்மா காலனி வழியாக சென்றால் 2 கி.மீ., துாரம் தான். இதேபோல் பர்மா காலனி, பெரிய பொட்டல்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து மக்கள் ஈஞ்சார் விலக்கு வழியாக மல்லி, ஸ்ரீவில்லிபுத்துார் ராஜபாளையம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் பர்மா காலனி செல்லும் ரோட்டில் 7 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாலம் முழுவதும் சேதம் அடைந்து இடிந்து விழுந்து விட்டது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 5 கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.
எனவே சேதம் அடைந்த பாலத்தை சீரமைக்க,வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சேதம் அடைந்த பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!