Load Image
Advertisement

தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு



திருவாடானை: தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான உப்பு சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதால் நோயாளிகள் அதிர்ச்சியும், அதிருப்தியடைந்தது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் அங்கு ஆய்வு செய்தார்.

தொண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினமும் 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். கோடை காலம் என்பதால் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் காலை சிகிச்சைக்காக நிறைய பேர் சென்றனர். அவர்களுக்கு உப்பு சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது. அந்த பாக்கெட்டுகளை வாங்கி பார்த்த நோயாளிகள் அதிர்சியடைந்தனர். காலாவதியாகி ஒரு மாதத்திற்கும் மேலானதால் அச்சத்தால் மருந்தை சாப்பிடவில்லை.

தொண்டியை சேர்ந்த மாலிக் கூறுகையில், உப்பு சர்க்கரை பாக்கெட் 2021 அக்.,ல் தயார் செய்யப்பட்டுள்ளது. 18 மாதம் வரை உபயோகபடுத்தலாம், என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்., மாதத்தோடு காலாவதியாகிவிட்டது. இதே போல் மாவட்டத்தில் இன்னும் எத்தனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலவாதியான மருந்துகள் உள்ளதோ தெரியவில்லை, என்றார்.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் முதல் பக்கம் பேனர் செய்தியாக நேற்று வெளியானது.

இதன் எதிரொலியாகநேற்று காலை 9:00 மணிக்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர் விசிட் செய்தார்.

அங்கு நோயாளிகளின் குறைகளை கேட்டார். அங்குள்ள மருந்து விற்பனை மையத்தை பார்வையிட்டவர் அங்குள்ள உப்பு சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் மற்றும் மருந்துகளை ஆய்வு செய்தார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement