திருப்புல்லாணி: வரி வசூல் உள்ளிட்ட கட்டண வசூல் குறித்து ஊராட்சி அலுவலக பணியாளருக்கு ஆன்லைன் பதிவேற்றம் குறித்து தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பயிற்சி அளிக்கப்பட்டது.
பொதுமக்கள் கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை இணைய வழியில் செலுத்தும் வசதி உருவாக்கப்பட்டு மே 18ல் அனைத்து கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, தொழில் உரிமை கட்டணம், வரி இல்லாத வருவாய் இனங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதற்கான கட்டணங்களை ஆன்லைன் பேமென்ட், ஏடிஎம் கார்டு, யுபிஐ பேமென்ட் உள்ளிட்ட கட்டண முறையில் செலுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது.
அவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு பயிற்சி வழங்காததால் திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது.
இதன் எதிரொலியாக திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பரமசிவம் தலைமையிலும், பி.டி.ஓ.,க்கள் கணேஷ் பாபு, ராஜேந்திரன் முன்னிலையிலும், தலைமை பயிற்சியாளர் மூலம் ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான ஆன்லைன் பதிவேற்றம் குறித்த பயிற்சி வகுப்புகள் நடந்தது.
இதையடுத்து தினமலர் நாளிதழுக்கும் ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் நன்றி தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!