மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்: ஓட்டு வங்கி அரசியலில், பா.ஜ., ஈடுபடவில்லை. நாட்டின் நலனை கருத்தில் கொண்டே அனைத்தையும் செய்து வருகிறது. மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பணிகள், 2026 பிப்ரவரி அல்லது மார்ச்சில் முடியும்.
டவுட் தனபாலு: மதுரை எய்ம்ஸ் பணிகள், 2026 மார்ச்ல முடியும்னு சொல்றீங்க... அதே வருஷம் ஏப்ரல்ல தானே தமிழகத்துல சட்டசபை தேர்தலும் நடக்கும்... அதை கணக்கு பண்ணி தான், எய்ம்ஸ் பணிகளை தள்ளி போடுறீங்களோ என்ற, 'டவுட்' எழுதே!
-பத்திரிகை செய்தி: திருச்சி மாவட்டம், நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சைமலையில், சட்டவிரோதமாக செம்மண் கொள்ளை நடந்தது. இதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட, ஆர்.ஐ., பிரபாகரன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக, தி.மு.க., ஊராட்சி தலைவர் மகேஸ்வரன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப் பட்டனர். இதையடுத்து, தி.மு.க.,வில் இருந்து, மகேஸ்வரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
டவுட் தனபாலு: சில நாட்கள்ல, மகேஸ்வரன் ஜாமின்ல வந்துடுவார்... சில வாரங்கள்ல, தன் செயலுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி குடுத்துட்டா, மறுபடியும் கட்சியில சேர்த்துப்பாங்க... இந்த மாதிரி, சட்டவிரோத செயல்ல ஈடுபட்டவங்களை, கட்சியில இருந்து நிரந்தரமா நீக்கினா தானே, மத்தவங்களுக்கும் பயம் வரும்... அதை, தி.மு.க., தலைமை செய்யாதது ஏன் என்ற, 'டவுட்' வருதே!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்த தொழிலதிபர்கள், டில்லிக்கு அடிக்கடி வந்து செல்பவர்கள். அவர்களை சந்திக்க, எதற்காக அவர் ஜப்பான் சென்றார் என்பது தெரியவில்லை.
டவுட் தனபாலு: என்னங்க இது, நம்ம வீட்டுல நடக்கிற விழாவுக்கு, சந்திக்கிற இடத்துல விருந்தாளிகளுக்கு பத்திரிகை குடுத்தா மதிப்பாங்களா... அந்த மாதிரி, அடுத்த வருஷம் நம்ம ஊர்ல நடக்கப் போற முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வாங்க என, அழைக்கத் தானே முதல்வர் போயிருக்காரு... எதிர்க்கட்சி என்றால், எல்லாத்தையும் குறை சொல்லணுமா என்ற, 'டவுட்' தான் வருது!
கொலை செய்தவரையே கட்டிக்காப்பாற்றும் கட்சி, வெறும் தாக்குதலுக்கு சும்மா சஸ்பெண்ட், மூன்றாம் நாள் சேர்ப்பு என்றுதான் விளையாடும்