அறிவியல் ஆயிரம்
ரப்பர் பந்து.. இரும்பு குண்டு...
ஒரு பொருளின் நெகிழ்ச்சித் தன்மையைப் பொருத்தே அது துள்ளும் உயரம் தீர்மானிக்கப்படுகிறது. இரும்புக் குண்டும் ரப்பர் பந்தும் ஒரே அளவாக இருந்தாலும் அவற்றின் அடர்த்தி வெவ்வேறானது. அடர்த்தி அதிகமான இரும்புக் குண்டில் நெகிழ்ச்சித் தன்மை குறைவாகவும், ரப்பர்பந்தில் அதிகமாகவும் இருக்கும். இருந்தாலும் இரும்புக் குண்டை நிலத்தில் துாக்கிப் போடும்போது குறைந்த அளவு ஆற்றலை செலவிட்டு உயரமாகத் துள்ளுகிறது. நெகிழ்ச்சித் தன்மை அதிகம் இருந்தாலும் ரப்பர் பந்து, அதிக ஆற்றலைச் செலவிடுவதால் அது செல்லும் உயரம் குறைகிறது.
தகவல் சுரங்கம்
முதல் பெண் நியமன எம்.பி.,
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், ராஜ்யசபாவில் நியமன எம்.பி., யாக ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். மொத்த நியமன
எம்.பி., க்களின் எண்ணிக்கை 12. இதில் முதல் பெண் நியமன எம்.பி.,யாக நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர் ருக்மிணி தேவி அருந்தலே. இவர் 1952 ஏப்., 3 - 1962 ஏப்., 2 வரை நியமன எம்.பி., யாக பணியாற்றினார். 1904 பிப்., 29ல் மதுரையில் பிறந்தார். பரதநாட்டியக் கலைஞர். விலங்குகள் நல ஆர்வலராகவும் இருந்தார். பத்ம பூஷண், சங்கீத நாடக அகாடமி உட்பட பல விருதுகளை பெற்றவர். 1986 பிப். 24ல் மறைந்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!