அறிவியல் ஆயிரம்:கடல் நீர் உப்புக்கு காரணம்
அறிவியல் ஆயிரம்
கடல் நீர் உப்புக்கு காரணம்
உலகில் உள்ள தண்ணீரின் பெரும்பகுதி கடலில் உப்பு நீராகத்தான் இருக்கிறது. பாறைகள், மணலை கரைத்துக்கொண்டு மழைநீர் ஆறுகளில் சேர்கிறது. இப்படி வரும்போது பாறை, மணலில் உள்ள தாது, உப்புகளை எடுத்துக்கொண்டு சென்று கடலில் சேர்க்கிறது. கடலில் சேரும் நீர் வெப்பத்தால் ஆவியாகிறது. உப்பு கடலிலேயே தங்கிவிடுகிறது. ஆவி, மேகமாகக் குளிர்ந்து மீண்டும் மழையாகப் பொழிகிறது. அந்த நீர் தாதுக்கள், உப்புகளை எடுத்துக்கொண்டு ஆறு மூலம் கடலில் சேர்க்கிறது. இப்படித்தான் கடல் நீர், உப்பு நீராக இருக்கிறது.
தகவல் சுரங்கம்
அமைதிப்படையின் சிறப்பு
உலகில் போர், வன்முறை உள்ளிட்ட ஆபத்தான சூழல்களில் களமிறங்கி அமைதியை நிலைநாட்டுவதே ஐ.நா., அமைதிப்படையின் நோக்கம். இவர்களது சேவையை அங்கீகரிக்கும் விதமாக மே 29ல் ஐ.நா., அமைதிப்படைக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப் படுகிறது. 70 ஆண்டுகளில் இப்படையை சேர்ந்த 4000 வீரர்கள் பலியாகினர். இது 1945ல் உருவாக்கப்பட்டது. 90 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியா உட்பட பல நாட்டு வீரர்கள் உள்ளனர். காங்கோ, சோமாலியா, ருவாண்டா உட்பட பல போர்களில் அமைதியை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!