அன்னுார்: 'சீல்' வைக்கப்பட்ட பிறகும் பார்கள் செயல்படுவது குறித்து, நமது நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, பாரில் கயிறு கட்டி தடை ஏற்படுத்தப்பட்டது.
கோவை புறநகரில் அரசுக்கு மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் செயல்படும், மதுக்கடைகளில் சிறப்பு குழு சோதனை நடத்தியது.
இதில் அன்னுார் வட்டாரத்தில், கட்டணம் செலுத்தாத ஆறு மதுக்கடைகளுக்கு அதிகாரிகள் 25ம் தேதி சீல் வைத்தனர். பாரில் மது அருந்த அனுமதிக்க கூடாது என ஊழியர்களை எச்சரித்து சென்றனர்.
ஆனால் பாரில் உணவு தயார் செய்யும் இடம் மட்டும் சீல் வைக்கப்பட்டிருந்தது. மற்ற இடங்களில் வழக்கமாக வரும் குடிமகன்கள் அமர்ந்து, மது அருந்தினர். இது குறித்து நேற்றைய நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து கோவை வடக்கு டாஸ்மாக் மேலாளர், ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில்,''சீல் வைக்கப்பட்ட பார்களில் மது அருந்த அனுமதிப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.
சீல் வைத்த பார்களில் யாரும் நுழையாதபடி தடை செய்ய வேண்டும், மீறி யாராவது அங்கு மது அருந்தினால், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பார் சீல் வைக்கப்பட்ட மதுக்கடை பாரில் மது அருந்தாதபடி, ஊழியர்கள் தடை ஏற்படுத்தினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!