அறிவியல் ஆயிரம்
ஹீலியத்தின் பயன்
ஹீலியத்தின் அணு எண் 2. இது பிரபஞ்சத்தில் ஹைட்ரஜனுக்கு அடுத்து அதிகமுள்ள தனிமம். இது மந்த வாயுக்களில் ஒன்று. அனைத்து வேதிப் பொருட்களுடனும், இது எளிதில் வினைபுரிவதில்லை. எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்களிலும் கடலடிக்கு நீந்திச் செல்லும் ஸ்கூபா டைவிங்கிலும் ஹீலியம் உதவுகிறது. நஞ்சற்றதாகவும் எளிதில் அழுத்தப்படக்கூடியதாகவும் இருப்பதால், கடலடியில் நீந்துதலுக்கான சிறப்பு சுவாசக் கருவிகளில் ஹீலியம் சேர்க்கப்படுகிறது.நட்சத்திர மண்டலங்களை உருவாக்குவதில் ஹீலியம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தகவல் சுரங்கம்
நெருப்பின் நிலம்
கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியாவுக்கு இடையில் உள்ளது அஜர்பைஜான் நாடு. ரஷ்யா, காஸ்பியன் கடல், ஜார்ஜியா, அர்மேனியா, ஈரான் ஆகிய நாடுகள் இதன் எல்லைகளாக உள்ளன. இங்கு 'யானர் டாக்' என்ற இடம் உலக சிறப்பு மிக்கது. 'நெருப்பின் நிலம்' என அழைக்கப்படும் இங்கு இயற்கையாகவே தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. கடந்த 4000 ஆண்டுகளாக மழை, பனி, காற்று என எந்த சூழலிலும் அணையாமல் தீ எரிகிறது. இதற்கு அப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள எண்ணெய் வளமே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!