Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம் ஈர மணல்.... உலர்ந்த மணல்

அறிவியல் ஆயிரம்
ஈர மணல்.... உலர்ந்த மணல்
எந்த ஒரு பொருளின் மூலக்கூறுக்கு இடையேயும் 'பிணைப்பு விசை' நிகழ்கிறது. இருவேறு பொருள் சேரும்போது, அவற்றின் மூலக்கூறுக்கு இடையேயும் கவர்ச்சி விசை உண்டாகிறது. இது ஒட்டுவிசை எனப்படும். மணலும் தண்ணீரும் கலந்த ஈரமணலின் மூலக்கூறு இடையே உண்டாகும் இந்த ஒட்டுவிசையானது, உலர்ந்த மணலின் மூலக்கூறு இடையே நிலவும் பிணைப்பு விசையைவிட வலிமையானது. இதனால் ஈர மணல்பரப்பில் போதுமான கெட்டித்தன்மை ஏற்படுவதால் எளிதாக நடக்க, ஓட முடிகிறது. ஆனால் உலர்ந்த மணலில் கெட்டித்தன்மை இல்லாததால் இதில் எளிதாக நடக்க இயலாது.

தகவல் சுரங்கம்
இயற்கையின் கொடை
மேற்கு தொடர்ச்சி மலை மேற்கில் மஹாராஷ்டிரா -- குஜராத் எல்லையில் தபதி ஆற்றுக்கு தெற்கே தொடங்கி மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தமிழகம், கேரளாவில் பரவி கன்னியாகுமரியில் முடிகிறது. வடக்கு தெற்காக துாரம் 1600 கி.மீ. கிழக்கு மேற்காக அகலம் 100 கி.மீ. இதன் பரப்பளவு 1.60 லட்சம் சதுர கி.மீ. சராசரி உயரம் 3900 அடி. நாட்டின் 40 சதவீத நீர் உற்பத்தி இதன் மூலம் கிடைக்கிறது. இது அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்காற்றை மறைத்து, அதன் மேற்கு பகுதியில் உள்ள கேரளா, மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு நல்ல மழைப்பொழிவை தருகிறது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement