அறிவியல் ஆயிரம்: அதிகரிக்கும் முதுகுவலி
உலகில் 2050க்குள் முதுகுவலியால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை 84 கோடியாக இருக்கும். இதிலும் அதிகபட்சமாக ஆசியா, ஆப்ரிக்காவை சேர்ந்தவர்களாக இருப்பர் என 30 ஆண்டு தரவுகளை ஆய்வு செய்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புகைப்பிடித்தல், உடல்பருமன் போன்றவை இதற்கு முக்கிய காரணம். ேமலும் மக்கள்தொகை அதிகரிப்பு, முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவையும் பாதிக்கப் படுபவர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 2020ல் 62 கோடியாக உள்ளது.
தகவல் சுரங்கம்
பிசியான ரயில் நிலையம்
மேற்கு வங்கத்திலுள்ள ஹவுரா ரயில் நிலையம், இந்தியாவின் பிசியான ரயில் நிலையம் என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பழமையான, பெரிய ரயில் நிலையங்களில் ஒன்று. 1854 ஆக. 15ல் இங்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. தற்போது தினமும் 600 ரயில்கள் (பயணிகள், சரக்கு ரயில் உட்பட), இந்த ரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன. தினமும் 10 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். 23 பிளாட்பார்ம்கள் உள்ளன. ரயில் நிலையத்துக்கு அருகே 2006ல் ரயில் மியூசியம் திறக்கப்பட்டது. இது கிழக்கு ரயில்வே, தென் கிழக்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் செயல்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!