அறிவியல் ஆயிரம்: நீண்டநாள் வாழ...
நீண்ட ஆயுள் வாழ்வதற்கு உணவுக்கட்டுப்பாடு, தொடர் உடற்பயிற்சி முக்கியம் என
பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் குறைந்தளவு ஆக்சிஜன் எடுத்துக்கொள்பவர்கள், மற்றவர்களை விட 50 சதவீதம் கூடுதல் ஆயுட்காலத்தை பெறுகின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள், பிறந்து ஒரு மாதமான சுண்டெலிகளை 2 பிரிவாக பிரித்தனர். ஒரு குழுவில் 21%, மற்ற குழுவுக்கு 11% ஆக்சிஜனை வழங்கினர். உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. இதில் 21% ஆக்சிஜன் எடுத்தவை 15 வாரமும், மற்றவை 24 வாரமும் உயிர்வாழ்ந்தது கண்டறியப்பட்டது.
தகவல் சுரங்கம்
உலக தைராய்டு தினம்
உலகில் 20 கோடி பேர் தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பு. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும். இது கழுத்தின் கீழ்ப்பகுதி மையத்தில் அமைந்திருக்கும். உடலில் ஏற்படும் வளர்சிறை மாற்றங்களைக் கட்டுப்படுத்த இந்த தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது உடலில் உள்ள திசுக்கள், செல்கள், மூளை, இதயம் போன்றவை இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது. இப்பாதிப்பு குறித்து
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மே 25ல் உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!