அறிவியல் ஆயிரம்: 'அக்னி' காரணம்
அக்னி நட்சத்திரம் காலம் என்பதால் தற்போது வெயில் கொளுத்துகிறது. கோடை வெயிலுக்கும் நட்சத்திரங்களுக்கும் தொடர்பு இல்லை. பூமியின் சுழல் அச்சு 23.5 டிகிரி சாய்வாக சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. அப்போது பூமியின் வடபுலம், 6 மாதம் சூரிய ஒளி நேராக விழும் வகையிலும், அடுத்த 6 மாதம் தென்புலத்தில் நேராக விழும் வகையிலும் அமையும். சூரிய ஒளி நேராக விழும் காலம் கோடை. சாய்வாகப்படியும் காலம் குளிர் காலம். நிலநடுக்கோட்டுக்கு அருகே உள்ள தமிழகப் பகுதியில் சூரிய ஒளி நேர்கோணத்தில் விழும் காலமே அக்னி நட்சத்திரக் காலம்.
தகவல் சுரங்கம்
சகோதரர்கள் தினம்
சகோதரர்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக மே 24ல் சகோதரர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2005ல் அமெரிக்காவில் இத்தினம் தொடங்கப்பட்டாலும் பல்வேறு நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. சின்ன சின்ன சண்டைகள் இருந்தாலும், உடன்பிறந்தவருக்கு ஒரு பிரச்னை என வந்துவிட்டால் அண்ணன் - தம்பி ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பர். 'தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்பார்கள். உடன் பிறந்த சகோதரர்கள் இல்லையென்றாலும், கவலைப்பட வேண்டாம். உறவினர், நண்பர்களை சகோதரர்கள் போல கருதி பாசமழை பொழியலாம்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!