அறிவியல் ஆயிரம்: ஐம்பது ஆண்டில் 20 லட்சம் பேர்
அதிகரித்த வெப்பநிலை காரணமாக 50 ஆண்டுகளில் 11,778 பேரழிவுகளால், 20 லட்சம் பேர் பலியாகினர்.இதில் 90% வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். அதிக பட்சமாக 47% ஆசியாவை சேர்ந்தவர்கள். வங்கதேசத்தில் அதிகபட்சமாக 5.20 லட்சம் பேர் உயிரிழந்தனர் என உலக வானிலை அமைப்பு (டபிள்யு.எம்.ஓ.,) தெரிவித்துள்ளது. வெள்ளம், புயல், காட்டுத்தீ போன்ற பேரழிவுகளால் 83 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார சேதம் அடைந்துள்ளது. 2027க்குள் முன்னெச்சரிக்கை அமைப்பு வசதி உலகில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என டபிள்யு.எம்.ஓ., வலியுறுத்தியுள்ளது.
தகவல் சுரங்கம்
உலக ஆமைகள் தினம்
ஆமை இனங்களை அழிவிலிருந்து பாதுகாக்க வலியுறுத்தி 2000 முதல் ஆண்டுதோறும் மே 23ல் உலக ஆமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை உட்பட 300க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இதன் ஆயுட்காலம் 150 - 300 ஆண்டுகள். ஊர்வன இனத்தை சேர்ந்த இவை 50 - 200 முட்டை இடும். கடல் ஆமைகளில் மிகச்சிறியது சித்தாமை. ஆமைகள் மணிக்கு 5.5 கி.மீ., வேகத்தில் செல்வதால் எளிதில் சுறா,
திமிங்கலங்களுக்கு இரையாகின்றன. மன்னார்
வளைகுடா, வங்கக்கடலில் அதிகம் வாழ்கின்றன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!