அறிவியல் ஆயிரம்: வவ்வாலின் தனிச்சிறப்பு
பாலுாட்டியை சேர்ந்த ஒரே பறக்கும் இனம் வவ்வால். இவை மரக்கிளையில் தலைகீழாக தொங்குவதை பார்த்திருப்போம். ஏனெனில் இதன் கால்கள் நிற்பதற்கு ஏற்ப அமையவில்லை. பறப்பதற்கு ஏற்ப இருகால்களும் சவ்வால் இணைக்கப்பட்டுள்ளன. மரக்கிளையில் கால்களால் தலைகீழாக தொங்கும்போது எதிரிகளின் கண்களுக்கு எளிதாக புலப்படுவதில்லை என்பதால் இவ்வாறு செய்கின்றன. மேலும் இவை பறவையை போல நிலத்திலிருந்து பறக்க இயலாது. தலைகீழாக தொங்கும்போது பறப்பது இதற்கு எளிது. அதேபோல பார்வைக்கு இவை காதுகளை பயன்படுத்துகின்றன.
தகவல் சுரங்கம்
பல்லுயிர் பாதுகாப்பு தினம்
ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனி வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒன்று மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான் பூமியில் சமநிலை ஏற்படும். நாம் உணவு, மருத்துவம் உள்ளிட்ட தேவைக்கு பல்லுயிர்களை சார்ந்து இருக்கிறோம். பல்லுயிர்களுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆண்டுதோறும் ஐ.நா. சார்பில் மே 22ல் சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீர், நிலத்தில் வாழும் உயிரின வகைகளின் தொகுப்பு பல்லுயிர் பரவல் எனப்படுகிறது. 'அனைத்து உயிர்களுக்கும் பகிரப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!