அறிவியல் ஆயிரம்: பலுான் மிதப்பது எப்படி
பலுானில் உள்ள காற்றை வெப்பப்படுத்தும்போது அது விரிவடைகின்றது. இதன் காரணமாக பலுானில் உள்ள காற்றின் அடர்த்தி குறைகிறது. அதனால் பலுானில் உள்ள காற்றின் அடர்த்தி, வெளிப்புறத்தில் உள்ள காற்றின் அடர்த்தியைவிட குறைகிறது. இந்த அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக வெப்பக்காற்று அடைக்கப்பட்ட பலுான், காற்றில் மிதக்கின்றது. நெருப்பு என்பது காற்று சேர்ந்த வெப்பமான புகைதான். ஆகவே அடர்த்தி குறைவான நெருப்புப் பிழம்பும், அதிலிருந்து வரும் புகையும் புவிஈர்ப்புவிசையை மீறி மேல்நோக்கி எரிகின்றன.
தகவல் சுரங்கம்
சர்வதேச தேநீர் தினம்
உலகில் தண்ணீருக்கு அடுத்து பெரும்பாலானோர் அருந்தும் பானமாக தேநீர் எனும் 'டீ' உள்ளது. தேயிலையில் தயாரிக்கப்படும் தேநீர் உடலுக்கு நல்லது என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. உலகில் தேயிலையின் உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில்
மே 21ல் சர்வதேச தேநீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் தேயிலை உற்பத்தியில் சீனா, இந்தியா முதலிரண்டு இடங்களில் உள்ளது.
* முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட தினமான மே 21, ஆண்டுதோறும் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!