ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சி, 11வது வார்டு, திருவள்ளூர் சாலை இடது புறம் உள்ளது பாலாஜி நகர். இங்கு, 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதியில், குடியிருப்புகளில் இருந்து கழிவு நீர் வெளியேற பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கால்வாய் அமைக் கப்பட்டது.
முறையான பராமரிப் பின்மையால், தற்போது கால்வாய் முழுவதும் புதர் சூழ்ந்து, கழிவு நீர் வெளியேற முடியாமல் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, கால் வாயை சூழ்ந்த செடிகளை அகற்றி சீரமைத்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!