காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில் உள்ள தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி கிளை எதிரில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி, மேன்ஹோல்' வழியாக கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது. இதனால், சாலையில் நடந்து செல்வோர், கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
பொதுமக்கள் மற்றும் வாகன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு நீக்கப்பட்டு, மேன்ஹோல்' சீரமைக்கப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!