தினமும் பத்து பக்கங்களாவது வாசிக்காவிட்டால் அன்றைக்கு நாள் நாளாகவே இருக்காது என்கிறார் 97 வயது முன்னாள் மருத்துவர் சோமசுந்தரம்.
சென்னை பெசண்ட் நகர்வாசியான இவர் கீழ்பக்கம் மனநல மருத்துவனையில் நீண்ட காலம் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்ற இவருக்கு புத்தகம் வாசிப்பது என்பது மிகவும் பிடித்த விஷயம். சங்ககால இலக்கியம் முதல் கண்ணதாசன் வரை தமிழிலிலும், ேஷக்ஸ்பியர் முதல் ெஷல்லி வரை ஆங்கிலத்திலும் படித்துள்ளார்பணி ஒய்வுக்கு பிறகு 80 வயது வரை மனநல மருத்துவராக மக்களுக்கு மருத்துவம் பார்த்தவர் பின், மருத்துவம் பார்ப்பதைவிட்டுவிட்டு, உண்ணும் உறங்கும் நேரம் தவிர மீதி நேரத்தை புத்தகம் வாசிக்க பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.வீட்டில் எங்க பார்த்தாலும் பழைய மரபீரோக்களும் அது நிறைய புத்தகங்களுமாக உள்ளது.வயது மூப்பின் காரணமாக காது கேட்பது குறைந்து விட்டது கண் பார்வையும் மங்கி வருகிறது, எங்கே வாசிக்கமுடியாமல் போய்விடுமோ? என்பதற்காக ‛விஷ்வல் மேக்னிபையர்' என்ற ஒரு எலக்ட்ரானிக்கருவியை வாங்கி வைத்துள்ளார். இந்த கருவியை ஆன் செய்து புத்தகத்தின்மீது கொண்டு சென்றால் சின்ன சின்ன எழுத்துக்களைகூட பெரிய எழுத்துக்களாக்கி காட்டும் இந்த கருவியை பயன்படுத்தி இன்றைக்கும் ஒரு புத்தகத்தில் இருந்து பத்து பக்கத்தையாவது படித்து விடுகிறார்.எனக்கு ஓரு நாளுக்கு கொஞ்சம் தண்ணீர் கொஞ்சம் உணவு போதும் பசி தாகம் அடங்கிவிடும் ஆனால் புத்தகம் மட்டும் புதிது புதிதாக நிறைய வேண்டும் இலக்கியம் மருத்துவம் சம்பந்தமாக நிறைய படிப்பேன்.
மகாகவி பாரதியாரை வறுமை தின்றதைவிட போதை வஸ்துகள் தின்றதுதான் அதிகம் அவர் மட்டும் தனது நலனில் அக்கறை காட்டியிருந்தால் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பார் இன்னும் பல கவிதைகளை தந்திருப்பார் என்பது இவரது கருத்தாகும்.
இன்றைய இளைஞர்கள் மொபைல் போனிலேயே வாழ்கிறார்கள் ஆனால் வாசிக்கிறார்களா என்றால் இல்லை காரணம் நிமிடத்திற்கு நிமிடம் அவர்களது நேரத்தை கொள்ளை அடிக்க அதில் பல விஷயங்கள் மாறி மாறி இடம் பெறுகின்றன. இது எப்போதும் மனதை பதட்டமாகவே வைத்திருக்கும். மன அழுத்தத்திற்கும் ஆளாக நேரிடும், ஆனால் புத்தகம் அப்படியல்ல அதில் உள்ள கேரக்டர்களுக்கு நீங்கள் கற்பனை வடிவம் கொடுத்து படிக்கும் போது உள்ளத்திலும் உடலிலும் பரவசம் ஏற்படும் இதுதான் நல்லதும் கூட, நான் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் படித்ததை கேட்டால் கூட இப்போதும் சொல்வேன் காரணம் புத்தக அறிவு அப்படிப்பட்டது, ஆகவே புத்தகத்தை புத்தகவடிவில் மட்டுமே படிக்கவேண்டும் என்கிறார்.
கதை,கட்டுரை,கவிதை எனறு எழுத்தின் எல்லா திசையிலும் பயணிக்கும் இவர் இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார், இப்போது தான் படித்த புத்தகங்களிலும் பார்த்த சினிமா ,நாடகங்களிலும் உள்ள மனநலம் தொடர்பான விஷயங்களை தொகுத்து தமிழில் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டு இருக்கிறார்,படிக்க காத்திருப்போம்..
-எல்.முருகராஜ்
நல்ல கட்டுரை. நல்ல விஷயம். அய்யா வாழ்க