Load Image
Advertisement

எங்களை கடவுள் பார்த்திருப்பார்...

சம்பாதித்த பணத்தை ஏழை எளிய சமூகத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் சிலருக்குதான் வருகிறது.
சென்னையில் உள்ள ராஜஸ்தான் வாலிபர் சங்கம் மற்றும் சென்னை உணவு வங்கி அமைப்பினர் அத்தகையவர்கள்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகளை பொழுபோக்கு இடங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை அழைத்துச் செல்வர்
இந்த வருடம் திருமலை திருப்பதி பெருமாளின் தரிசனத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர்..சென்னையில் இருந்து தனி ரயிலில் ரேணிகுண்டா வரை பயணம்,பின் அங்கிருந்து தனி பஸ்சில் திருமலைக்கு சென்று தள்ளு முள்ளு இல்லாமல் விஜபி தரிசனம், பின்னர் போனது போலவே பஸ்,ரயில் மூலம் சென்னை திரும்பினர்.இந்த பயணத்தில் 160 பார்வையற்றோர்,100 உடல் :ஊனமுற்றோர்,108 முதியோர்,50 மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் ஆதரவற்ற இல்லத்தில் வளரும் சிறார்கள் என மொத்தம் 1008 பேர் இடம் பெற்றிருந்தனர்.இவர்களுக்கு சிறப்பான உணவு வழங்கப்பட்டதுடன் ரயில் பயணத்தின் போது பல்வேறு கலைஞர்களின் நிகழ்சிகளை ஏற்பாடு செய்து உற்சாகப்படுத்தினர்.தங்களுக்கு சிறப்பு தரிசனம் கிடைத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி,இதில் பலருக்கு இதுதான் முதல் பயணம் என்பதால் அவர்களின் முகங்களில் அதிக பிரகாசம் .வெங்கடேஸ்வரரின் தெய்வீக தரிசனத்தைப் பெறும் இந்த நல்வாய்ப்பை வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
பார்வையற்றவர்களின் சார்பில் ஹரிணி என்பவர் பேசும் போது , நாங்கள்தான் கடவுளை பார்க்க முடியவில்லையே தவிர கடவுள் எங்களை நிச்சயம் பார்த்திருப்பார், குறைகளை தீர்த்து வைப்பார் என்று நம்புகிறோம்,.ரொம்பவும் சந்தோஷமாக உணர்கிறோம், நன்றாக படித்து உயர்ந்த வேலையில் அமர்ந்து, எங்களை அரவணைத்து பாதுகாக்கும் ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவ வேண்டும், அதுதான் நாங்கள் கடவுளிடம் வைத்த வேண்டுகோள் என்றனர்...அவர்கள் நினைப்பது நடக்கட்டும் பிரார்த்தனைகள் பலிக்கட்டும்.
-எல்.முருகராஜ்



வாசகர் கருத்து (1)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    அம்பானி மற்றும் அதானிகள் கவனிக்க ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement