பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு ஆலோசனை வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னை கலைவாணர் அரங்கில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
15 ற்கும் மேற்பட்ட துறை வல்லுனர்கள் வழிகாட்ட தமிழகம் முழுவதும் உள்ள பிரபலமான எண்பது கல்லுாரிகளின் அரங்குகள் இடம் பெற்றிருந்த இந்த வழிகாட்டி நிகழ்வை தவறவிட்ட மாணவர்கள் உண்மையிலேயே அபாக்கிசாலிகளேஅந்த அளவிற்கு மாணவ மாணவியர் ஏதாவது ஒரு விதத்தில் பயன்பெற வேண்டும் என்பதற்காக நிகழ்வுகள் செதுக்கப்பட்டு இருந்தது.கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் முதல் ஐஐடி.,இயக்குனர் காமகோடி வரை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் நிறையவே உண்டு
சொந்த பந்தம் சொன்னார்கள் அக்கம் பக்கம் தெரிவித்தார்கள் என்றெல்லாம் முடிவெடுக்காதே உனக்கு எது பிடித்திருக்கிறதோ அதைப்படி அதை விரும்பிப்படி ரசித்துப்படி அதில் சாதிக்குமளவிற்கு ஆழ்ந்து படிமுன்பு போல வெறும் என்ஜீனிரிங் படிப்பு எல்லாம் வேலைக்காகது அதன் கூடவே கூடுதலாக இரண்டொரு படிப்புகளையும் சேர்த்து படி பிராம்ட் என்ஜீனிரிங் என்பது அதுதான் வேலை கொடுப்பவர்கள் இப்போதெல்லாம் மதிப்பெண் பார்த்து வேலை கொடுப்பதில்லை வேலை கொடுத்தால் ஸ்மார்ட்டாக செய்வானா என்பதைத்தான் பார்த்துதான் வேலை கொடுக்கின்றனர்.
ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ட் என்பது படிப்பல்ல அது ஒரு டூல் ஆகவே அதனை தெரிந்துகொண்டு தேவை உள்ள எல்லாவிஷயத்திலும் அப்ளை செய்து கொள்ளலாம்.பல ஆண்டுகளாக இந்த வழிகாட்டி நிகழ்வு நடந்துவந்த போதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது புதிய விஷயங்கள் விவாதிக்கப்படும் மாணவர்கள் மத்தியில் அது கொண்டு போகப்படும்.
இந்த வருடம் அதிகம் பேசப்பட்டது சாட் ஜிபிடி ஆகும்.கூகுள் டிரைவிடம் ஒரு விஷயம் கேட்டால் அது விக்கிபீடியா மூலமாக சில தகவல்கள் தரும் அதன் மேம்பட்ட வர்ஷன்தான் இந்த சாட் ஜிபிடி.
முட்டி மோதி புரோகிராம் கோட் எழுதுபவர்களுக்கு இந்த சாப்ஜிபிடி முடிவுரை எழுதிவிட்டதாக சொல்லப்படுகிறது காரணம் இதனிடம் எந்த கோட் எழுதச்சொல்லி கேட்டாலும் நிமிடங்களில் எழுதிக்கொடுத்துவிடுகிறது.
இதே போல பத்து புத்தகம் பார்த்து படித்து எழுத வேண்டிய விஷயங்களை நிமிடங்களில் இந்த சாட் ஜிபிடி எழுதிக்கொடுத்து விடுகிறது என்பதால் பத்து புத்தகம் படித்து விஷயத்தை திரட்ட வேண்டிய வேலையே இல்லை.
இருந்தாலும் இதனைக் கண்டு பயப்பட வேண்டியது இல்லை ஒவ்வொரு அறிவியல் முன்னேற்றம் வரும் போது இது போன்ற குய்யோ முறையோ என்ற குரல்கள் ஒலிக்கத்தான் செய்யும் ஆனால் எந்தவித ஒரு அறிவியல் முன்னேற்றத்தையும் தடுக்கவோ தடை செய்யவோ முடியாது ஆகவே அதை வேலைவாங்கும் விதத்தில்நமது அகவிஷயத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றனர்.
பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் காட்டிய ஆதரவு பெரிய விஷயம் எதிர்கால கல்வி பயம் கண்ணில் தெரிய மழங்க மழங்க விழித்தபடி இருந்த மகள்களின் தோள்களை ஆறுதலாக அன்பாக பிடித்தபடி நீ விரும்பியதை படி நானிருக்கிறேன் என்று சொல்லியபடி சென்ற தந்தையர்கள் நிறைய பேர்
அதே போல படிக்க வந்துவிட்டோம் நாற்காலியில் உட்கார இடம் இல்லாவிட்டால் என்ன படிக்கட்டில் உட்கார்ந்து கேட்டுவிட்டு போகிறோம் என்று படிக்கட்டில் உட்கார்ந்து ஆலோசனைகளை கேட்ட மாணவர்களையும் மனமார பாராட்டத்தோன்றியது.
-எல்.முருகராஜ்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!