தமீம் அன்சாரி
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர்
வேலைக்கு போன இடத்தில் மெஷினில் அடிபட்டு வலது கையை இழந்தார்
ஆனால் நண்பர்கள் குடும்பத்தினர்கள் உறவினர்கள் கொடுத்த ஆதரவால், இழந்தது கையை மட்டும்தான் வாழ்க்கையை அல்ல என்ற நம்பிக்கையை பெற்றார்.
பொதுமக்களுக்கு பான்கார்டு எடுத்து தருவது போன்ற சமூகம் சார்ந்த வேலைகளைப் பார்த்து வரும் இவருக்கு ஏதாவது சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது
சைக்கிள் ஒட்டுவதில் ஆர்வம் கொண்ட இவர் முதல் முறையாக சென்னையில் இருந்து 200 கிலோமீட்டர் துாரம் ஒரே கையால் சைக்கிளை தனியாக ஒட்டிசென்று திரும்பினார்உடல் வலித்தது ஆனால் மனமோ இனித்தது நம்மாலும் சாதிக்கமுடியும் என்ற நம்பிகை துளிர்த்தது.
தொடர்ந்து சைக்களில் பல்வேறு இடங்களுக்கு பயணித்தார் இவரது சைக்கிள் ஆர்வத்தை பார்த்த நண்பர்கள் இவரை பல்வேறு சைக்கிள் ஒட்டும் போட்டிகளில் சேர்த்துவிட்டனர்
இவர் கலந்து கொண்ட பல போட்டிகள் ஒபன் கேட்டகேரியாகும் அதாவது அனைத்து துறையினரும் கலந்து கொள்ளக்கூடிய பொதுவான போட்டியாகும் அதில் கலந்து கொண்டு வெற்றிகள் குவித்தள்ளார்.
சென்னை பெருங்குடியைச் சேர்ந்த சைக்கிள் விற்பனையாளரான புரோ பைக்கர்ஸ் சுரேஷ்,தமீம் அன்சாரிக்காகவே இடது கையாலேயே பிரேக் போட்டு இடது கையாலேயே கியர் மாற்றும் அளவிற்கு மாற்றங்கள் செய்த சைக்கிளை உருவாக்கி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் எந்த நிலையிலும் உடற்பயிற்சியை விட்டுவிடக்கூடாது என்று அனைத்து இடங்களிலும் பேசக்கூடிய தமிழக சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சால் ஈர்க்கப்பட்டு, உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊட்டியில் இருந்து சென்னை நோக்கிய சைக்கிள் பயணத்தை தமீம் அன்சாரி மேற்கொண்டார்.பயணத்தின் நிறைவாக சென்னை வந்தவர் அமைச்சர் சுப்பிரமணியனை நேற்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அமைச்சரின் அன்பும் ஆதரவும் வாழ்த்தும் என்னை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது அடுத்தடுத்த சைக்கிள் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் தந்துள்ளது.
அவரை வாழ்த்துவதற்கான போன் எண்:81223 00800
-எல்.முருகராஜ்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!