Load Image
Advertisement

'டவுட்' தனபாலு

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: நானும், முதல்வரும், கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றோம். அப்போது கவர்னர், என் வயது குறித்து கேட்டார். அதற்கு முதல்வர், 'என் அப்பாவுடன், 53 ஆண்டுகள் கூடவே இருந்தவர்' என, என்னை பற்றி கூறினார். அப்போது, உதயநிதி அந்த பக்கம் அமர்ந்திருந்தார். நான் கவர்னரிடம், 'உதயநிதிக்கு ஒரு மகன் இருக்கிறான். அவருடனும் நான் தான் இருப்பேன்' என்றேன்.

டவுட் தனபாலு: 'உதயநிதி மகன் அமைச்சரவையிலயும் பணிபுரிவேன்' என்பதன் வாயிலாக, 'தி.மு.க.,வின் தலைமை பீடத்தை, கருணாநிதி குடும்பத்துக்கு பட்டா போட்டு குடுத்தாச்சு... அதுக்கு யாரும் ஆசைப்படாதீங்க' என்பதை நாசுக்கா சொல்றீங்களோ என்ற, 'டவுட்' எழுதே!

lll

தமிழக முதல்வர் ஸ்டாலின்:
எங்கள் தாய்மொழியை தள்ளி வைக்க சொல்கிறது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம். தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள். ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள். குழந்தையை கிள்ளிவிட்டு, சீண்டி பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள்.

டவுட் தனபாலு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் - ௪ தேர்வுல, ஐந்து லட்சம் பேர் தமிழ் பாடத்துல தோல்வி அடைஞ்சிருக்காங்களே... தமிழ் மொழியை, திராவிட மாடல் அரசு வளர்த்த லட்சணம் இதுதானா என்ற, 'டவுட்' எழுதே!

lll

பத்திரிகை செய்தி: நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா, தன் லாக்கரில் இருந்து, 3.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மாயமானதாக புகார் அளித்த நிலையில், வீட்டு பணிப்பெண்ணிடம் இருந்து, 3 கோடி ரூபாய் மதிப்பிலான 100 சவரன் நகைகள், 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளி, 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: புகாருக்கும்,பறிமுதலுக்கும் இடையில மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் இருக்குதே... நேர்மையான போலீசாரா இருந்ததால, நிஜமான கணக்கை காட்டியிருக்காங்க... இல்லை என்றால், புகாரில் குறிப்பிட்ட நகைகளை மட்டும் திருப்பி தந்துட்டு, மிஞ்சியதை, 'லவட்டி' இருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll



வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இந்த மாதிரி 'பூதம்' புறப்படும் என்று தெரிந்திருந்தால் அந்தப் பெண்மணியை சைலண்டாக வேலையை விட்டு நீக்கிவிட்டு முடித்திருக்கலாம்? சொத்துப்பத்திரத்தை திருடி என்ன லாபம் அவருக்கு? புதுப் புது 'கதைகள்' வெளிவரும் போலிருக்கிறதே ஒருவேளை 'விவாகரத்து' கலாட்டாவுக்கும் இதற்கும் கூட ஏதாவது சம்பந்தம் இருக்கலாமோ ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement