உலகில் உற்பத்தியாகும் ஆற்றலில், 54 சதவீதத்தை தொழிற்சாலைகளே கபளீகரம் செய்கின்றன. எனவே, குறைவான ஆற்றலை வைத்து பொருட்களைத் தயாரிக்கும் முறையை சிலர் ஆராய்ந்து வருகின்றனர்.
'வைல்டு மைக்ரோப்ஸ்' அந்த வகை ஆராய்ச்சியாளர் தான். நுண்ணுயிரிகளை வைத்து, சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை, குறைந்த ஆற்றல் செலவில், பெருமளவில் உற்பத்தி செய்ய திட்டமிடுகின்றனர் வைல்டு மைக்ரோப்சின் விஞ்ஞானிகள்.
இதுவரை வேதியல் துறையினர் கண்டுபிடிக்காத, புதுவகை நுண்ணுயிரிகளை கண்டுபிடித்து ஒரு புதிய பட்டியலை அவர்கள் தயாரித்து வருகின்றனர். இந்த நுண்ணுயிரிகள் உருவாக்கும் வேதிப் பொருட்கள் மனிதர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கவேண்டும் என்பது தான் அடிப்படை தகுதி.
பிறகு அந்த நற்குணங்களை அதிகரிக்கும் வகையில், நுண்ணுயிரிகளுக்கு மரபணு திருத்தம் செய்தால், அவற்றின் மூலம், வேகமாக, மலிவாக, நமக்கு வேண்டிய பொருட்களை தயாரிக்கலாம் என்கின்றனர் வைல்டு மைக்ரோப்சின் விஞ்ஞானிகள்.
முதற்கட்டமாக, உணவு, அழகு சாதனம், சலவைத் துறைகளில் பயன்படுத்தப்படும் உயிரிப் புரதங்களை தயாரிக்கும் நுண்ணுயிரிகளை கண்டறிய வைல்டு மைக்ரோப் விஞ்ஞானிகள் மும்முரமாகி உள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!