தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன்: அ.தி.மு.க., வினர், அவர்கள் ஆட்சியில் அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றிய மாதிரியும், நாங்கள் நிறைவேற்றாதது போலவும் பேசுகின்றனர். அ.தி.மு.க., சார்பில், 2011, 2016 சட்டசபை தேர்தலின் போது கொடுத்த, 507 வாக்குறுதிகளில், 269க்கு மட்டுமே அரசாணை வெளியிட்டு உள்ளனர்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வினர், 2011 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டிருந்தால், 2016 தேர்தலில், மறுபடியும் அவங்களையே மக்கள் எப்படி தேர்வு செஞ்சாங்க... 'அவங்களாவது ஒண்ணுக்கு பாதியாவது செய்வாங்க, நீங்க ஒண்ணுமே செய்ய மாட்டீங்க'ன்னு மக்கள் நினைச்சிருக்கலாமோ என்ற, 'டவுட்' வருதே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தற்கொலைக்கு முயலும் அளவுக்கு, அண்ணாமலை பல்கலை தொகுப்பூதிய பணியாளர்களின் நிலை மோசமடைந்திருப்பது வேதனை அளிக்கிறது. உயர்கல்வி அமைச்சரிடம் இந்த சிக்கலை கொண்டு சென்ற போது, அவர்களை பணி நிரந்தரம் செய்ய நிதித் துறை செயலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அவர்களை பணி நீக்கம் செய்ய கட்டாயப்படுத்துவதாகவும் கூறியதாக தெரிகிறது.
டவுட் தனபாலு: அமைச்சர் கூறுவது நம்புற மாதிரியா இருக்குது... நல்லவை நடந்தால், 'என்னால தான் நடந்துச்சு'ன்னு தம்பட்டம் அடிச்சுக்கிறதும், அல்லவை நடந்தால், அதிகாரிகள் மீது பழியை போடுவதும், தி.மு.க.,வினருக்கு கைவந்த கலை என்பதில், 'டவுட்'டே இல்லை!
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சரான, பா.ஜ.,வின் அனுராக்சிங் தாக்குர்: காங்கிரசை சேர்ந்த பவன் கெரா மீதான அவதுாறு வழக்கின் போது, அக்கட்சியின் வழக்கறிஞர்கள் குழு, ஒரு மணி நேரத்தில் களம் இறங்கியது. ஆனால், ராகுல் விவகாரத்தில் ஒருவர் கூட வரவில்லை. கட்சிக்குள் அவருக்கு எதிராக சதி நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டவுட் தனபாலு: என்னங்க இது... 'ராகுலுக்கு எதிரான நடவடிக்கை சரிதான்'னு ஒரு பக்கம் முழங்குறீங்க... மறுபக்கம், இப்படியும் கோர்த்து விடுறீங்களே... பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
-
பா ஜ விற்கான முக்கிய பேச்சாளரை - ராவுல் வின்சியை - இழக்க கட்சி தயாரில்லை என்பது தெரிகிறது. ராவுல் மேலும் தொடந்து பேசுவார், வரவேற்கிறோம்.