Load Image
Advertisement

'இன்னும் மோசமாகிடுமோ?'

திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதுார் அம்பேத்கர் சட்ட கல்லுாரியில், தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

இதில், பூந்தமல்லி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்று பேசுகையில், 'நானும் இதே கல்லுாரியில் தான் படித்தேன். அப்போது, கல்லுாரி சென்னையில் இயங்கியது. நாங்க அடிச்ச லுாட்டிக்கு அளவே இல்லை.

'அந்தப் பக்கம் யாரு வராங்க, போறாங்கன்னு பார்த்து, போலீசுக்கே நாங்க தான் தகவல் சொல்வோம். எவ்வளவோ போராட்டம் நடத்தி இருக்கோம். கல்லுாரிக்கு சரியாகவே போகாமல், பாஸ் ஆகி இன்றைக்கு வழக்கறிஞரா, எம்.பி., - எம்.எல்.ஏ.,வாக ஆகி இருக்கோம்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'இப்ப தெரியுதா இந்த காலேஜ் ஏன், 'அவுட் ஆப் சிட்டி'க்கு வந்துச்சுன்னு...' என, அருகில் இருந்த நிருபரை பார்த்து கேட்க, அவரோ, 'இவரு மாணவர்களை உசுப்பேத்துறதை பார்த்தா, போகப் போக நிலைமை இன்னும் மோசமாகிடுமோ...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினர்.



வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அதுதான் எம் எல் ஏ ஆக உட்கார்ந்து நிம்மதியாக கோர்ட் பக்கம் போவதை தவிர்த்துவிட்டார். இவரை முன்னோடியாகக்கொண்டு மாணவர்கள் வீண் கனவு காணாமல், படிப்பில் கருத்தாக இருங்கள்.

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    சோதித்துப்பார்த்தால் சட்ட ஞானம் ஜீரோ என்பது தெரியவரும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement