சென்னை ஓட்டேரியில் நடந்த, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பட்டிமன்றத்தில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின், மக்களிடம் சொன்னதை செய்ததால் தான், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ், 65 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்று ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற மன்னர்கள் ஆண்ட காலத்தை, பொற்காலம் என்றனர். இன்று, நம் முதல்வரின் ஆட்சிக்காலம் தான் பொற்காலமாக இருக்கிறது' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'தொண்டனை கல்லால் அடித்தல், மனு கொடுக்க வந்தவங்க தலையில் மனுவாலேயே தட்டுதல், அதிகாரிகளை சகட்டு மேனிக்கு திட்டுதல், அரசு பஸ்சில் பயணிக்கும் பெண்களை, 'ஓசி கிராக்கிகள்' என கிண்டல் அடித்தல், சொந்தக் கட்சி எம்.பி., வீட்டையே அடித்து உடைத்தல்னு, அமைச்சருங்க, 'அட்ராசிட்டி'யை முதல்வர் கண்டுக்கவே மாட்டாரு... அதனால, அமைச்சர்களுக்கு மட்டும் தான், இது, பொற்கால ஆட்சி...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.
'கல்லெறி அமைச்சர்' என்ற விருது பெற்ற இவர் காட்டில் 'பால் மழை' பொழிவதால் மக்களுக்கெல்லாம் பொற்காலம் வந்ததாக கூறுகிறாரோ ?