Load Image
Advertisement

உங்களுக்குச் சேவை செய்கிறது அரசின் தொழில்நுட்பம்

சில ஆண்டுகளுக்கு முன் வரை, தொழில்நுட்பத்தை அணுகுவது என்பது நகர்ப்புற உயர்மட்ட மக்களுக்கு மட்டுமே கிடைக்கும் சலுகையாக இருந்தது. கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு இணையம் கட்டுப்படியாகவில்லை.
கடந்த, 2014 ஆம் ஆண்டு வரை, 25 கோடி இந்தியர்கள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தினர். இது 2022ல் 84 கோடியாக அதிகரித்துள்ளது. முன்னதாக, 1 ஜி.பி., டேட்டாவின் கட்டணம், 300 ரூபாயாக இருந்தது. இப்போது அது, 1 ஜி.பி.,க்கு 13.5 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதனால் அனைவரும் டேட்டா வாங்க முடிகிறது. தொழில்நுட்பத்தின் மூலம் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள மாற்றத்துக்கான எடுத்துக்காட்டு இது.

கொரோனா பெருந்தொற்று, ஒரு சோதனை காலகட்டம்.அந்த நேரத்தில் 'டிஜிட்டல் இந்தியா' முயற்சிகள், பாதிப்புகளின் தாக்கத்தை குறைத்தது. மலிவு விலையில் இணையச் சேவைகள் கிடைத்ததால், அது அனைவரையும் சென்று சேர்ந்தது.

சுயசார்பு இந்தியா திட்டம்



கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் துவங்கிய போது, உ.பி., பல்ராம்பூரைச் சேர்ந்த சுஹானி சாஹு என்ற மாணவி, 'தீக் ஷா தளம்' வாயிலாக தன் பாடங்களை ஆன்லைனில் படித்தார்.
பீகாரின் கிழக்கு சம்பாரனில்உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் சுபம் குமார் என்பவர், 'இ - சஞ்சீவினி' செயலியின் வாயிலாக, மருத்துவரிடம் இருந்து தொலைமருத்துவ ஆலோசனையைப் பெற்று, நோய்வாய்ப்பட்ட தன் தாய்க்கு தடையின்றி சிகிச்சை அளித்து, பயண நேரத்தையும்செலவையும் மிச்சப்படுத்தினார். இதுவரை 10 கோடிக்கும் அதிகமான தொலைமருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. டேராடூனில் உள்ள டாக்சி டிரைவரான ஹரி ராமுக்கு, உ.பி.,யில் உள்ள ஹர்தோயில் ரேஷன் அட்டை இருந்தது.ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ், டேராடூனில் கூட அவரால் உணவுப் பொருட்களைப் பெற முடிந்தது.
இந்தியாவின் தொலைதுார மூலைகளில் உள்ள மக்களுக்கு ஆதார் வாயிலாக செயல்படும் பேமென்ட் முறையை பயன்படுத்தி, இந்திய அஞ்சல் துறையின் கிராமப்புறத் தபால்காரர் வீட்டு வாசலுக்கு வந்து நிதிச் சேவைகளை வழங்கினார். தொழில்நுட்பத்தை வறுமைக்கு எதிரான ஒரு கருவியாக மாற்றவும், வாழ்வதற்கான வசதியை அதிகரிக்கவும் பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சி இந்திய மக்களுக்கு பலனளித்துள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நன்கு முன்னேற்றம்அடைந்துள்ளன. அவை நம் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டன. செயற்கை நுண்ணறிவு, '5ஜி' குவாண்டம் தொழில்நுட்பம் ஆகியவை பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் அளவிற்கு முதிர்ச்சியடைந்துள்ளன.இது 2023ஐ ஒரு திருப்புமுனை ஆண்டாக மாற்றியுள்ளது. இந்தப் பரபரப்பான சூழலில், 'ஜி - -20' அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
சுயசார்பு இந்தியா திட்டத்தால் உருவான தொழில்நுட்ப வளங்கள், உலகின் கவனத்துக்கு வருவதற்குத் தயாராக உள்ளன. அவற்றை அதிக நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும்.

டிஜிட்டல்' மயம்



'இன்று மக்கள், அரசைத் தடையாகப் பார்ப்பதில்லை; புதிய வாய்ப்புகளுக்கான தூண்டுகோலாகப் பார்க்கின்றனர். இதில், தொழில்நுட்பம்மிகப் பெரிய பங்கை வகித்துள்ளது' என, பிரதமர் மோடி சொல்கிறார். பிரதமர் மோடியின் இந்த வார்த்தைகள் நாடு முழுதும் எதிரொலிக்கின்றன. இந்தத் தொலைநோக்குப் பார்வையால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தெரிய வருகின்றன.
இந்தியாவில் டிஜிட்டல் மாற்றம் முழுமையாக ஏற்பட்டுள்ளது. இந்தியா, பொதுமக்களுக்கான டிஜிட்டல் தளங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. அது கட்டற்ற திறவுமூல மென்பொருட்களினால் உருவானது. அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. அளவில் மிகப் பெரியது. டிஜிட்டல் வாயிலாக மட்டுமே சேவைகளை அணுகுபவர்களுக்கும் ஏற்றது.
அப்படித்தான் 'கோவின்' வலைத்தளம் உருவாக்கப்பட்டது. இதில், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், கிளினிக்குகள், மருத்துவமனைகள் முதல், மக்கள் பதிவு செய்து, ஊசிப் போட்டு, அதற்கான சான்றிதழைப் பெறுவது வரை அனைத்தும் நடைமுறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. இதன் மூலம் முதல் 12 மாதங்களில் 150 கோடி டோஸ் தடுப்பூசிகளைச் செலுத்த முடிந்தது.
தற்போது இந்தியாவில் 220 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம், கோவின் வலைத்தளம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உருவாகியுள்ளது.

பெரிய புரட்சி



தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமுதாயத்திற்கு நன்மை செய்ய முடியும் என்பதை இந்தியா நிரூபித்து உள்ளது. இன்று, தெரு வியாபாரிகள், காய்கறி கடைக்காரர்கள், சிறிய கடைக்காரர்கள் முதல் இந்தியா முழுவதும் உள்ள பெரிய ஷோரூம்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான 'க்யூ.ஆர்.கோட்' குறியீடுகள் காணக் கிடைக்கின்றன.
சாலையோர சிறிய டீக்கடையில் சூடான தேநீர் மற்றும் சிற்றுண்டிகளுக்கு நடுவில் 'ஸ்கேனிங்'கிற்காக 'க்யூ.ஆர். கோட்' அடையாளம் வைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பது சகஜமாகிவிட்டது.பொது நிதியைப் பயன்படுத்தி, நாங்கள் ஒரு தளத்தை உருவாக்கினோம். அதில், வங்கிகள் இணைந்தன, காப்பீட்டு நிறுவனங்கள் இணைந்தன, 'இ- - காமர்ஸ்' நிறுவனங்கள், குறு, சிறு நிறுவனங்கள், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் இணைந்தன.
மிக முக்கியமாக, 120 கோடி மக்களும் இணைந்தனர். இந்த பொதுத் துறை -- தனியார் கூட்டு முயற்சியில், எந்த ஒரு நிறுவனமும் முழுமையான கட்டுப்பாட்டை பெற்றிருக்கவில்லை. இது ஜனநாயகப்பூர்வமானதும் கூட.கடந்த, 2016ல் துவங்கப்பட்ட யு.பி.ஐ., இப்போது ஒவ்வொரு ஆண்டும் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிவர்த்தனைகளை செய்து வருகிறது. ஒவ்வொரு பரிவர்த்தனையும் இரண்டே நொடிகளில் முடிந்துவிடுகிறது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மையும் சவுகரியமும் மேம்பட்டுள்ளன.
இதனாலேயே இந்தியாவின் யு.பி.ஐ., டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கான உலகளாவிய தரநிலையாக மாறியுள்ளது. வாழ்க்கைத் தரத்தை எளிமைப்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் பங்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
நம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் நிற்காமல் தொடர்ந்து செல்வதை 'பாஸ்டேக்' தொழில்நுட்பம் உறுதி செய்துள்ளது.இத்தொழில்நுட்பத்தின் பயன்பாடு சுங்கச்சாவடிகளில் நெரிசலையும் காத்திருப்பு நேரத்தையும் குறைத்துள்ளது. இதனால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சுமுகமாகியுள்ளது. 5ஜி அறிமுகம் ஆனதால் தொழில்நுட்பத்தில் பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது.நாங்கள் ஏற்கனவே 5ஜி கவரேஜுடன், 481 மாவட்டங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவியுள்ளோம்.
இந்தியாவில் 5ஜி சேவையைத் துவங்கும் போது, மக்கள்வாழ்க்கையை எளிதாக்குவதற்காக, சுகாதாரம், கல்வி, விவசாயம், கட்டுமானத் துறைகள் போன்றவற்றில் 5ஜியைப் பயன்படுத்துவதற்கான தன் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார் பிரதமர் மோடி.

100 சதவீதமாக உயரும்



அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்ப ஏற்றுமதியாளராக மாறுவதற்கு இந்தியா அயராது உழைத்து வருகிறது.இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளின் வாயிலாக நம் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் திறமையை நாங்கள் நிரூபித்துள்ளோம். இப்போது நாங்கள் ஓ.சி.இ.என்., என்ற 'திறந்த கடன் செயலாக்க நெட்வொர்க்' உருவாக்கி வருகிறோம்.
இது பணப்புழக்க அடிப்படையில் கடன் வழங்கும் நடைமுறை ஆகும். ஒரு நபருக்கு கடன் வழங்குவதற்கு பல்வேறு வங்கிகளுக்கு இடையே ஓ.சி.இ.என்., இணைப்பு போட்டியை உருவாவதோடு, வாடிக்கையாளருக்கான வட்டி விகிதத்தையும் குறைக்கும்.இந்த ஓ.சி.இ.என்., நடைமுறைப்படுத்தப்படும் போது, கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையே இருக்கும் விகிதம், 2031 ஆம் ஆண்டிற்குள் உயரும் என மார்கன் ஸ்டான்லியின் மதிப்பிட்டுள்ளது. அதாவது, தற்போது இருக்கும் 57 சதவீதத்தில் இருந்து அது 100 சதவீதமாக உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் இந்தத் தொலைநோக்கு பார்வையால், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப புரட்சி சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது, மாற்றுகிறது.இது ஏழை மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகாரத்தை அளிப்பதுடன், திறமையான இளம் தலைமுறையின் ஆக்கப்பூர்வமான அறிவில், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான திறனை ஏற்படுத்துகிறது.இந்தத் தொழில்நுட்ப புரட்சியானது, இப்போது சுகாதாரத் துறை, கல்வித் துறை, தளவாடங்கள், விவசாயம், பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் பிரதிபலிக்கிறது. அதேபோன்ற தொழில்நுட்ப தளங்கள் உருவாக்கப்படுகின்றன.
இதன் வாயிலாக, ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பெரு நிறுவனங்களும் பல்வேறு புதிய வசதிகளை ஏற்படுத்த முடியும்.உலகளாவிய நிச்சயமற்ற சூழலில் இந்தியா தன் சுதந்திர தின நுாற்றாண்டில் நுழைந்துள்ளது. தொலைநோக்கு பார்வைஉள்ள, தீர்க்கமான செயலாக்கம்மிகுந்த பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா முன்னோக்கி நகர்கிறது.
இந்நிலையில், ஜி - 20 நாடுகளுக்கு இந்தியா தலைமை ஏற்றிருப்பதன் வாயிலாக, நம் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

அஸ்வினி வைஷ்ணவ், மத்திய ரயில்வே, தொழில்நுட்பத் துறை அமைச்சர்



வாசகர் கருத்து (3)

  • அப்புசாமி -

    இதுல என்ப வியப்ப்ய்? 1980, 90 களில் ட்ரங்க் கால் புக்.பண்ணிட்டு உக்காந்திருக்கணும். இணைப்பு கிடைத்தால் கூப்பிடுவார்கள்.பிறகு பட்டி தொட்டியெங்கும் STD/ISD போன்வசதி வந்திச்சு. பிறகு கைப்பேசி. தற்போது வாட்சப் மூலம் ஃப்ரீயா எங்கே வேணா பேசலாம். டெலி மெடிசின் எல்லாம் வந்து ரொம்பநாளாச்சு. டெக்னாலஜி வளர வளர இதெல்லாம் தானே வளரும். இவிங்க என்னவோ புதுசா கண்டுபுடிச்ச மாதிரி. போய் பாஞ்சி லட்சம் என் அக்கவுண்ட்டில் போட்டு ஒரு வேலையும் குடுங்க.

  • V.Saminathan - ,

    அதே சமயம் பொதுமக்களின் செல்வத்தை கொள்ளையடிக்கும் ஆன்லைன் சீட்டாட்டம்-கிரிக்கெட் மற்றும் போலி கம்பெனிகளின் விளம்பரங்களும் வருகிறதென்பது கசப்பான உண்மை-பயனரின் பாதுகாப்பில் அரசு அக்கறை காட்டுவதில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement