Load Image
Advertisement

'நன்றி சொல்றதும் நாம தானா?'

'நன்றி சொல்றதும் நாம தானா?'



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்ட, காங்., இளங்கோவன், 1.10 லட்சம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

வெற்றி சான்று பெற்று, சென்னை சென்ற இளங்கோவன், இரு நாட்களில் மீண்டும் ஈரோடு வந்து, அடுத்த நாளே சென்னை சென்றார். பின், உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ந்து விட்டார்.

ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு அவரோ, அவருடைய கட்சி சார்பில் வேறு எந்த நிர்வாகிகளோ இதுவரை நன்றி கூற, தொகுதி பக்கம் வரவில்லை. மாவட்ட அமைச்சர் முத்துசாமி, தன் கட்சியினருடன், வார்டு வாரியாக நன்றி கூறி, வாக்காளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி வருகிறார்.

இதற்காக நிர்வாகிகளை அழைத்த போது, கடுப்பான, தி.மு.க., நிர்வாகிகள், 'நன்றி சொல்ல கூட அவங்க வர மாட்டாங்களா... அதுக்கும் நாம தானா...' என, அமைச்சரிடம் கொந்தளிக்க, 'மக்கள் நமக்காகத் தான் ஓட்டு போட்டாங்க... நாம தான் நன்றி சொல்லணும்' என, அவர்களை அமைச்சர் சமாதானப்படுத்தினார்.



வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    நோகாமல் நோன்பு கொண்டாடிவிட்டார்கள் காங்கிரஸ். இவர்கள் தேரை இழுத்து, நிலைக்கு வந்த பின்னும், சாமி தூக்கி சந்நிதிக்கும் போக வேண்டுமாம். இளங்கோவனுக்கு இந்த வயதில் சீட் கொடுத்த சமர்த்துக்கு இதுவும் வேண்டும், இன்னமும் தேவைதான்

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    பரிசு பொருட்களுக்கும் ஓட்டுக்கு பணமும் செலவு செய்தது எந்தகட்சியோ அவங்கதான் வந்தனம் சொல்லணும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement