Load Image
Advertisement

மனதிற்கும், உடலுக்கும் இதமான நடனம் - பரதத்திற்கு ஒரு பாண்டிகலா

பரத நாட்டிய பாடல் பொருளைக் கைமுத்திரைகள் காட்டும். அம்முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும் என பரதநாட்டியம் பற்றி கம்பர் அழகாக விவரித்துள்ளார். கண்களால் பேசி முத்திரைகளால் விளக்கி பாவனைகளால் நம்மை அசர வைக்கும் நாட்டியத்தை உயிர் மூச்சாய் கொண்டுள்ள ஆசிரியை பாண்டிகலா அளித்த பேட்டி:

நான் மதுரை பெண். சிறுவயதில் கோயில்களில் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை கண்டவுடன் காதல் வந்தது. அதனால் பரதம் கற்றுக் கொள்ள ஆர்வம் எனக்குள் தோன்றியது.

பள்ளிப் படிப்பை முடித்து 2003ல் மதுரை பசுமலையில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லுாரியில் நடனத்தில் டிப்ளமோ முடித்தேன். 2006 முதல் 'ஸ்ரீலா நாட்டியாலயா' என்ற பெயரில் நாட்டிய வகுப்புகள் எடுக்கிறேன்.

பரதத்தில் 8 வகுப்புகள் உள்ளன. பரதத்தின் வழியாக புதுமையாக மயில் நடனம், மான் நடனம், கோலாட்டம் கற்றுக் கொடுக்கிறேன். பல்வேறு கோயில்களில் என் மாணவர்கள் நிகழ்ச்சி நடத்தியுள்னர். கல்ச்சுரல் அகாடமி விருதும் பெற்றுள்ளேன். ஏப்ரலில் அழகர் கோயிலில் பரத நிகழ்ச்சி நடத்த உள்ளோம்.

பரதம் கற்றுக்கொள்வது மனதுக்கும் உடலுக்கும் பலன்களை தரும். பெண்கள் உடல் எடை குறைக்க ஒரு வழி நாட்டியம் ஆடுவது. பரதம் பயின்றால் நரம்புகள் வலிமை பெறும்.

நாட்டியம் ஆடும் போது கைகள் போகும் இடத்திற்கு கண்கள் பார்க்க வேண்டும். அப்போது கண்களுக்கும் பயிற்சியாக அமையும். தலை முதல் கால் வரை சிறந்த உடற்பயிற்சியாக இருப்பது பரதநாட்டியம்.

மனதோடு இணைந்து ஆடப்படுவதால் அமைதி ஏற்படுத்தும். 4 வயது குழந்தை முதல் எல்லோரும் பயிலலாம். என்னிடம் கற்றுக்கொண்ட பலர் நடன ஆசிரியராக பணிபுரிவதும், பல விருதுகளை பெறுவதும் எனக்கு பெருமை. ஆசிரியரின் வெற்றி மாணவர்களின் வளர்ச்சி தானே.

இவரை பாராட்ட... 75981 86865



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement