சுவரில் பூசும் வண்ணங்கள் முழுவதும் வேதிப் பொருட்களால் ஆனவை, அதில் கணிசமானவை நச்சுப் பொருட்கள் வேறு. சுவர் வண்ணங்கள் தயாரிக்கப்படும்போதே, கார்பன் உமிழ்ந்து காற்றைக் கெடுக்கின்றன. மேலும், தொழிற்சாலை, அலுவலகம், வீடு என்று எங்கு பூசினாலும், ஆண்டுக் கணக்கில் உள்ளிருக்கும் காற்றினை வேதிப் பொருள் கசிவால் நஞ்சாக்குகின்றன.
இந்த நிலையில், பிரான்சைச் சேர்ந்த, 'ஈகோட்' என்ற உயிரித் தொழில் நுட்ப நிறுவனம் அதே பெயரில் உயிரி முறையில் சேகரிக்கப்பட்ட பயோபாலிமர்களைக் கொண்டு வண்ணங்களையும் அவற்றை பிணைக்கும் பசைப் பொருட்களையும் உருவாக்கியுள்ளது. இரும்பு, அலுமினிய பலகைகள், சிமெண்ட் சுவர்கள் என்று பூசுவதற்கென பலவகை பெயிண்டுகளை ஈகோட் உருவாக்கியுள்ளது. வீடுகளின் சுவர்களில் இவற்றை பூசினால், சுவாசக் கோளாறு, பிற ஒவ்வாமைகள் எதுவும் வராது என ஈகோட்டின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிப்பில்லா சாயங்கள்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!