சுவையைவிட, உண்பதால் கிடைக்கும் அடர்த்தியான புரதத்திற்காகத்தான் இறைச்சியை பலரும் நாடுகின்றனர். அந்த புரதங்களை, நுண்ணுயிரிகள் மூலம் உற்பத்தி செய்து உணவுப் பொருளாக மாற்ற முடிந்தால், ஆடு, மாடு, கோழிப் பண்ணைகளுக்கு குட்பை சொல்லி விடலாம். சிங்கப்பூரிலுள்ள 'புல்லுலோ' என்ற புத்திளம் நிறுவனம், நல்ல கிருமிகள் மூலம் மிகுந்த சத்துள்ள, சாப்பிடத்தக்க, செலவில் குறைந்த புரதங்களை உற்பத்தி செய்து காட்டியுள்ளது.
புல்லுலோவின் புரதங்கள் வறுவல், அவியல், சூப், சாஸ் என்று பல உணவு வடிவங்களில் உட்கொள்ளும் வகையில் உள்ளது. நுண்ணுயிரிகளையும், வீணாகும் பழங்கள், காய்கறிகளையும் வைத்தே புதிய உணவுப் புரதங்களை புல்லுலோவின் விஞ்ஞானிகள் உருவாக்குகின்றனர். எனவே, பெருமளவில் உற்பத்தி செய்யவும் இந்தப் புரதம் உகந்தது.
உண்மையில் பாராட்டப்படக்கூடிய நிகழ்வு