Load Image
Advertisement

காஞ்சனாவின் கதை

சென்னையில் குதுாகலமாக நடந்து முடிந்த பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிசேகத்தில் அதிகம் பேசப்பட்டவர் பழம்பெரும் நடிகை காஞ்சனாதான்.
அவர் தானமாக கொடுத்த 80 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில்தான் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது என்பதுதான் பிரதான காரணம்.

இப்போது 80 வயதாகும் காஞ்சனா 1960-70 களில் கொடிகட்டிப் பறந்த முன்னனி கதாநாயகியாவார்.டைரக்டர் ஸ்ரீதரால் அடையாளம் காணப்பட்டு ‛காதலிக்க நேரமில்லை' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான காஞ்சனா அதன்பிறகு பல்வேறு மொழிகளில் முன்னனி நடிகையாக வலம்வந்தார்.இதுவரை 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காஞ்சானா பல படங்களில் முன்னனி நாயகியாகவே நடித்தவர்.பணம் கொட்டும் காமதேனு போன்ற காஞ்சனாவை கல்யாணம் என்ற பந்தத்தில் ஈடுபடுத்தி, வரும் வருமானத்தை இழக்க பெற்றோர்களுக்கும் சரி உற்றோர்களுக்கும் சரி மனசு வரவில்லை. கல்யாண பேச்சு வரும்போதெல்லாம் ‛என்ன அவசரம் பார்த்துக் கொள்ளலாம்' என்று இழுத்துக் கொண்டே சென்றனர், ஒரு கட்டத்தில் காஞ்சனா கல்யாண வயதை எல்லாம் தாண்டிவிட்டார் அதன்பிறகு அவருக்கே கல்யாண ஆசை வரவில்லை திருமணம் புரிந்து கொள்ளாமலே இருந்துவிட்டார்.
இவர் சம்பாதித்து பணம் கொடுக்கும் போதெல்லாம்,‛ உன் பணத்திலேதான் இந்த இடத்தை வாங்கியிருக்கிறோம்' என்று சொன்னவர்கள், சம்பாதிப்பதற்காக ஒடியது போதும் இனி ஒரு வீட்டைக்கட்டி கொஞ்சம் ஒய்வெடுப்போம் என் இடத்தைக் கொடுங்கள் என்று காஞ்சானா கேட்டபோது,‛எது உன் இடம்?' என்று கேட்டு தங்கள் கோரமுகத்தைக் காட்டியுள்ளனர்.
அதிர்ந்து போன காஞ்சனாவிற்கு ஆதரவாக இருந்தது தங்கை கிரிஜாவும், திருமலை பெருமாளும்தான்
சம்பாதித்த பணத்தை இழந்தது கூட காஞ்சானாவிற்கு பெரிதாக தெரியவில்லை ஆனால் தன்னை அநியாயமாக ஏமாற்றியதைத்தான் தாங்கமுடியவில்லை
நியாயம் கேட்டு சில முறை கோர்ட்டிற்கும் பல முறை திருமலைக்குக்கும் சென்று முறையிட்டுள்ளார் திருமலைக்கு போகும்போதெல்லாம் மலைப்பாதை வழியாக வாகனத்தில் செல்லாமல் கீழ்திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிற்கு நடந்தேதான் செல்வார்.பெருமாளே இந்த வழக்கில் ஜெயித்து என் சொத்து எனக்கு கிடைத்தால் பின் அது என் சொத்து அல்ல உன் சொத்து என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
கடைசியில் நியாயம் வென்றது சென்னையில் உள்ள இவரது சொத்து இவருக்கே திரும்ப கிடைத்தது
எல்லாம் பெருமாள் செய்த மாயம் என்றெண்ணிய காஞ்சானா தான் பெருமாளுக்கு கொடுத்த வாக்குப்படி திநகர் ஜிஎன் ெஷட்டி தெருவில் உள்ள ஆறு கிரவுண்டு நிலத்தை தானமாக பெருமாள் கோவிலுக்கு எழுதிக்கொடுத்துவிட்டார் அதன் மதிப்பு நாற்பது கோடி என்றும் இல்லையில்லை இன்றைக்கு அது எண்பது கோடி ரூபாய் பெறும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இந்தத் தொகை எல்லாம் என்னை சஞ்சலப்படுத்தவில்லை ஆழமான பக்தியோடு பெருமாளுக்கு சொன்னபடி கொடுத்துவிட்டேன் என்ற திருப்தியில் இருந்த காஞ்சானாவிற்கு, தான் தானமாக கொடுத்த இடத்தில் பெருமாளின் துணைவியாரான பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப்போவதாக வந்த செய்தி இன்னும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
கடந்த இரண்டு வருடங்களாக கட்டப்பட்டு வந்த கோவிலின் அழகை அமைப்பை அவ்வப்போது வந்து பார்த்து மகிழ்ந்திருந்த காஞ்சனா கும்பாபிேஷகத்தின் போது சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
என்னை இதற்காகத்தான் பெருமாள் படைத்தார் போலும் பத்மாவதி தாயாருக்கு இந்த எளிய பக்தைகயின் சின்ன காணிக்கை இது என் ஜென்ம சாபல்யம் அடைந்தது இந்தப் பிறவிக்கு இது போதும் இனி பிறவி ஏதும் வேண்டாம் மிச்சமிருக்கும் வாழ்க்கையை வாழ போதுமான அன்பும் ஆதரவும் பணமும் குறைவின்றி இருக்கிறது நாளும் பெருமாள் மற்றும் தாயாரின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்துவிட்டு அவர்கள் திருவடி போய்ச் சேர்வதுதான் இனி என் நோக்கம் என்று பழுத்த ஆன்மீகவாதியாக பேசுகிறார்.
புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பத்மாவதி தாயரை கும்பிட்ட கையோடு வெளியே வரும் பக்தர்கள் சிலர் காஞ்சானாவைப் பார்த்தும் கும்பிடுகின்றனர்
-எல்.முருகராஜ்



வாசகர் கருத்து (12)

  • VIDHURAN - chennai,இந்தியா

    காஞ்சனா அவர்களுடைய இறை நம்பிக்கையில் கோவிலுக்கு இடம் கொடுத்தார். இறை நம்பிக்கை உள்ளவர்கள் அவரது செயலை கண்டு நன்றி செலுத்துகிறார்கள். பெருமாளும் தாயாரும் ஆசீர்வதிக்கிறார் என்று நம்புகிறார்கள். இதில் மற்றவருக்கு கருத்து (எதிர்மறை)கருத்து சொல்ல என்ன தேவை இருக்கிறது. தயார் எல்லாரையும் ஆசிர்வதித்து நல்லருள் வழங்கட்டும். காஞ்சனா என்ற இறை நம்பிக்கை கொண்ட மூத்தவருக்கு எனது நன்றி.

  • DVRR - Kolkata,இந்தியா

    இவர் செய்தது மிக மிக நல்ல காரியம் செலவு???ஆஅனல் இந்த அலவுக்கு டப்பா அடிக்க அந்த் நிலம் ஒரு 1000 ஏக்கர் அல்ல???6 க்ரௌண்ட் 6 x 2400 sft/ground = 14,400 sft = 0.33 ஏக்கர் அது ரூ 40 கோடி இப்போது ரூ 80 கோடி????என்ன டப்பா இது???பம்பாயில் கூட இவ்வளவு விலை உயர்ந்த (சூர்யா வீட்டை பம்பாயில் சில நாட்கள் முன்பு வாங்கினார் 9,000 சதுர அடி வீடு ரூ 70 கோடி) நிலம் சென்னையில்?????

  • Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ

    எல்லாம் சரிதான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முழுவதுமாக திருப்திக்கே கொடுத்து உள்ளீர்களே அதில் சிறுது எவ்வளவோ அனாதை ஆசிரமங்கள் உள்ளது அதில் உங்கள் பெயரில் டிரஸ்ட் ஏற்படுத்தி உதவி இருக்கலாம். திருப்பதி என்றல் அந்த சேகர் ரெட்டி தன முன்னாள் நிக்கிறார் நீங்கள் மீண்டும் இந்த கயவர் கூட்டத்தில் விழுந்து வீட்டேர்களோ என்று தோன்றுகிறது. நீங்களும் அங்கு இருந்து வநதவர் தானே அதன் ஒன்று சேர்ந்துடீங்க போல.

  • A P - chennai,இந்தியா

    இந்தக் கோவிலையும் திருடி ஆட்டையைப் போட இன்னேரம் தமிழக திருட்டு கழகம் திட்டம் தீட்டி இருக்குமே. அந்த நாத்திகர்கள், பெருமாளை செருப்பால் அடித்தவர்களின் கூட்டாளி ஆயிற்றே. கம்மனாட்டிகள். அவர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும் அனைத்தையும் இழக்கும் நாளை, பெருமாள் இந்நேரம் குறித்துவிட்டிருப்பார்.

  • Bhakt - Chennai,இந்தியா

    உண்மையான ஆன்மீகவாதி unlike டுபாக்கூர் ரசினி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement