ஊழல் புகாரில் சிக்கியவருக்கு மீண்டும் பொறுப்பு?
''பெட்ரோல் குண்டு வீச்சுக்கு வேற காரணம் இருக்குன்னு சொல்லுதாவ வே...'' என்றபடியே, நாளிதழை மடித்தார் அண்ணாச்சி.
''யார் மேல, யார் குண்டு வீசினாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பக்கத்துல, 'டாஸ்மாக்' கடை மேல, போன 3ம் தேதி ஒரு வாலிபர் பெட்ரோல் குண்டு வீசினாருல்லா... இதுல, விற்பனையாளர் அர்ஜுனனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுச்சு வே...
''அவரை மதுரை அரசு மருத்துவமனையில சேர்த்தாவ... அமைச்சர் மூர்த்தி தலையிட்டு, தீக்காயத்துக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க, அர்ஜுனனை தனியார் மருத்துவமனைக்கு
மாத்தினாரு வே...
''சிகிச்சைக்கான முழு செலவையும் அமைச்சரே குடுத்திருக்காரு... அந்த குடும்பத்துக்கும் நிதியுதவி செஞ்சிருக்காரு... ஆனாலும், அர்ஜுனன் இறந்து போயிட்டாரு வே...
''இதுக்கு இடையில, பெட்ரோல் குண்டு வீசியவர், போலீசாரிடம், 'எங்கப்பா தினமும் குடிச்சிட்டு வந்து 'டார்ச்சர்' செஞ்ச ஆத்திரத்துல தான், கடையில குண்டு வீசினேன்'னு சொல்லியிருக்காரு... ஆனா, 'நிஜமான காரணம் இது இல்லை... வாலிபரிடம் தீவிரமா
விசாரிச்சா, உண்மை வெளிவரும்'னு, சக டாஸ்மாக் ஊழியர்கள் சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''நல்ல வேளையா 'பிளைட்' கிளம்பிடுத்துன்னு கிண்டலடிச்சு சிரிச்சிருக்கார் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சீனியர் அமைச்சர் துரைமுருகன், துபாய் போயிருக்காரோல்லியோ... இவர், 2022 மார்ச் மாசமே துபாய் கிளம்பினார்... சென்னை ஏர்போர்ட்ல, அவரது விசாவை செக் பண்ணப்ப, அதுல பழைய பாஸ்போர்ட் எண் இருந்ததால, அந்த பயணம்
ரத்தாகிடுத்து ஓய்...
''அப்பறமா சில மாதங்களுக்கு பிறகு, பாஸ்போர்ட் குளறுபடிகளை எல்லாம் சரி பண்ணிட்டு, துபாய்க்கு போக பிளைட்லயும் ஏறி உட்கார்ந்தார்... ஆனா, திடீர்னு நெஞ்சு வலி வரவே, அவசரமா இறங்கி, ஆஸ்பிட்டலுக்கு போயிட்டார் ஓய்...
''இப்ப, உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, துபாய்ல நேத்து துவங்கி நாளைக்கு வரைக்கும் நடக்கறது... இதை துவக்கி வைக்க, துரைமுருகன் மூணு நாளைக்கு முன்னாடியே போயிட்டார் ஓய்...
''பிளைட் கிளம்பற வரைக்கும் டென்ஷனா இருந்தவர், 'டேக் ஆப்'ஆனதும் தான், 'ரிலாக்ஸ் மூடு'க்கு வந்திருக்கார்... 'நல்ல வேளையா இந்த பயணம் ரத்தாகலை'ன்னு தன் நண்பர்களிடம் சொல்லி சிரிச்சிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''வேற ஆளே கிடைக்காம, பழையவரிடம் பொறுப்பை ஒப்படைக்க போறாங்க பா...'' என்றார்,
அன்வர்பாய்.
''எந்த துறை விவகாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''பட்டுப் புடவைக்கு பிரசித்தி பெற்ற ஊரின் அரசு தலைமை மருத்துவமனையில கண்
காணிப்பாளரா இருந்த பெண் அதிகாரியை தான் சொல்றேன்... கூடுதல் பொறுப்பா இதை பார்த்துட்டு இருந்தவங்க மேல, ஏகப்பட்ட ஊழல் புகார்கள் வந்துச்சு பா...
''போன மாசம் சுகாதாரத் துறை இயக்குனர் அலுவலக அதிகாரிகள் வந்து, அவங்களிடம் விசாரணை நடத்தினாங்க... அப்புறமா, பெண் அதிகாரி 'லீவ்'ல போயிட்டாங்க பா...
''கண்காணிப்பாளர் பதவிக்கு, மருத்துவமனையில இருக்கிற சீனியர் டாக்டர்கள் பலரிடம் கேட்டும், யாரும் வர மாட்டேங்கிறாங்க...
''இதனால, நிர்வாக சிக்கல்கள் வருது... பழைய அதிகாரிக்கு சென்னையில செல்வாக்கு இருக்கிறதால, அவங்களையே மறுபடியும் கண்காணிப்பாளர் பதவிக்கு
நியமிக்க போறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''கல்பனா மேடம் ஆத்துல ஒரு வேலை இருக்கு... கிளம்பறேன் ஓய்...'' என குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
*********************
உதயநிதி ஆபீஸ் முன் முற்றுகை போராட்டம்?
''கமிஷனருக்கும், மேயருக்கும் ஏழாம் பொருத்தமான்னா இருக்கு...'' என்றபடியே அமர்ந்தார், குப்பண்ணா.
''எந்த மாநகராட்சியில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''எல்லாம், கோவை மாநகராட்சியில தான் ஓய்... ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு போனதா சொல்லி, கவுன்சில் கூட்டத்துக்கான
தீர்மானத்துல மேயரம்மாகையெழுத்துப் போடலை... இதனால, பிப்ரவரி மாசம் மாமன்ற கூட்டமே நடத்தல ஓய்...
''ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பரிந்துரைத்த பல பைல்கள் நகராம தேங்கி கிடக்கறது... அதிகாரிகளிடம் விசாரிச்சா, 'மேயர்ட்டயே கேளுங்கோ'ன்னு கழண்டுக்கறா ஓய்...
''மேயரும் கண்டுக்கறது இல்ல... இதனால, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், மேயர் மேல கடும் கோபத்துல இருக்கா... மேயர் - கமிஷனர் பஞ்சா
யத்து விவகாரம், உளவுத்துறை மூலமா முதல்வர்வரை போயிடுத்து ஓய்...
''ஆனாலும், எந்த நடவடிக்கையும் இல்ல... ஏன்னா, மாவட்ட பொறுப்பு அமைச்சர்செந்தில் பாலாஜி ஆதரவு அவங்களுக்கு இருக்காம்... அதனால, ஒவ்வொரு தடவையும் தப்பிச்சிண்டே இருக்காங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.
கில் படத்தை விட பெரிய, 'சஸ்பென்சா' இருக்கு வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''நீங்க, 'சஸ்பென்ஸ்' வைக்காம சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''காரைக்குடி நகராட்சியில, தி.மு.க., சேர்மன் முத்து துரை பதவிக்கு வந்து ஒரு வருஷம் ஆயிட்டு... இதை கொண்டாடும் விதமா, 36 கவுன்சிலர்கள்ல ஒரு சிலர் தவிர, கட்சி பேதம்
இல்லாம எல்லாருக்கும், 1 சவரன் தங்கக் காசும், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும், முத்து துரை வாரி வழங்குனதா சொல்லுதாவ வே...
''கவுன்சிலர்கள் முகத்துல அந்த உற்சாகமும், பூரிப்பும் நல்லாவே தெரியுது... இது சம்பந்தமா, கமிஷனர் லட்சுமணனிடம் கேட்டா, 'எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல'ன்னு
நழுவுதாரு வே...
''சேர்மன் முத்து துரையிடம் கேட்டா, 'அதெல்லாம் நான் குடுக்கல... யாரோ புரளி கெளப்புதாவ'ன்னு சொல்லுதாரு... தங்கம் விக்கிற விலையில, யார்தான் குடுத்தான்னு மர்ம
மாக இருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''இந்த, 'குடி'மகன்களால, முதல்வர் மகனுக்கு தான் கெட்ட பேருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதியில இருக்கிற டாஸ்மாக் கடைகள்ல பார் வசதி இருந்தும், 'குடி'மகன்கள், 'வெளிய நின்னு காத்தாட தான்
குடிப்போம்'னு அடம் பிடிக்கிறாங்க...
''குறிப்பா, பாரதி சாலையில இருக்கிற மதுக்கடை முன்னாடியும், பக்கத்துல இருக்குற தெருவுலயும், கூட்டம் கூட்டமா நின்னு சரக்கு அடிக்கிறாங்க... ராத்திரி நேரங்கள்ல, பெண்கள் அந்த வழியா போகவே பயப்படுறாங்க...
''டாஸ்மாக் பக்கத்துலயே ஒரு மசூதியும் இருக்குது... 'குடி'மகன்கள் சரக்கு வாங்கிட்டு, பக்கத்துல இருக்குற கடைகள், வீட்டு வாசற்படிகள்ல உட்கார்ந்து சாவகாசமா குடிக்கிறாங்க... ஆபாசமா கூச்சலிடுறது, வீட்டு வாசல்லயே அசிங்கம் பண்றதுன்னு அலம்பல் தாங்க முடியலைங்க...
''இந்த டாஸ்மாக் கடையை இழுத்து மூடச் சொல்லி, எம்.எல்.ஏ., உதயநிதி
ஆபீஸ் முன்னாடி, தொகுதி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்காங்க... அதுக்குள்ள அவர் சுதாரிச்சுக்கிட்டா நல்லதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.
ஊழல் புகார் வந்தால் தான் நம்ம பொழப்பு ஓடும் பொறுப்புவரும் அதுக்கு