Load Image
Advertisement

இந்தியா - இலங்கை தொப்புள் கொடி உறவு!

'இலங்கை தனி நாடாக இருந்தாலும், இந்திய உபகண்டத்தின் நீட்சி' என்று, சிங்கள வரலாற்று நூல்களான, 'தீபவம்சம்' மற்றும் 'மகாவம்சம்' தெளிவாக குறிப்பிடுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்புகளையும், ஆழமான உறவுகளையும், புவியியல் ரீதியாகவும், இலங்கையின் வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
இலங்கையின் மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே இருக்கக்கூடிய மணல் திட்டுகள், தீவுகள், ஆழமில்லாமல் நடந்தே கடக்கக் கூடிய கடற்பகுதிகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இலங்கை இந்தியாவின் நீட்சியாக இருந்த பகுதி என்று, இலங்கையின் வரலாற்று நூல்களில் கூறப்படுகிறது.

புனித தெய்வம் புத்தர்



இந்தியாவுக்கும், இலங்கைக்குமான தொப்புள் கொடி உறவை, நம் நிலப்பரப்பின் உருவ அமைப்பே எடுத்துரைக்கிறது. ஒரு தாயின் முகம் போல தமிழகம், இலங்கையை நோக்குகிறது. இலங்கை கருப்பையின் வடிவத்தில், அவளின் அடிவயிற்றில் காட்சி அளிக்கிறது.

இலங்கையில் பெரும்பாலான மக்கள் வழிபடும் புனித தெய்வம் புத்தர். இலங்கை தமிழ் மக்கள் வழிபடும் தெய்வம் முருகன். இரண்டு தெய்வங்களுமே, இந்தியாவில் தோன்றிய தத்துவத்தை உணர்ந்தாலே, ஒரு தாய் மக்கள் நாம் என்ற உண்மை விளங்கும்.
இந்தியாவிலிருந்து அகஸ்தியர், புலஸ்தியர் என்ற முனிவர்களின் வழியாக கல்வி பரவியதாக, இலங்கை புராண நம்பிக்கைகள் எடுத்துரைக்கின்றன.
கி.பி., 6ம் நுாற்றாண்டில், பாலி மொழியில் எழுதப்பட்ட 'மகாவம்சம்' நுாலில், விஜயன் என்ற இளவரசன் வங்க தேசத்தில் இருந்து இலங்கைக்கு வந்து இறங்கிய பகுதி 'தாமிரபரணி அல்லது தம்பபண்ணி' என்று அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இலங்கையில் இன்றும் நல்லுார் பகுதியில், திருநெல்வேலி என்ற கிராமம் உள்ளது.
இந்தியாவின் தென்னாட்டு நதிகளான வைகையும், தாமிரபரணியும், இலங்கையின் தென்பகுதி வரை ஓடியதாக, வரலாற்று நம்பிக்கையும் நிலவுகிறது.

நல்லிணக்கம்



நீண்ட நெடுங்காலமாக, ராமேஸ்வரம் கோவிலில் உள்ள இறைவன் திருமேனிக்கு, பாலாபிஷேகம் செய்வதற்கான பசும்பால், இலங்கையின் நெடுந்தீவிலிருந்து தினமும் காலையில் வந்திருக்கிறது.
இலங்கையில் அசோகவனத்தில் சீதை வாழ்ந்த இடம், இலங்கையின் 'நுவரேலியா' பகுதியில் அமைந்துள்ளது. இது, இந்தியா - இலங்கை இடையே, ராமாயணம் ஒரு பாலமாக திகழ்வதை காட்டுகிறது.
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட சிக்கல்களை எல்லாம் சீராக்கி, நல்லிணக்கத்தை உருவாக்க, பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அமைதி நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
பிரதமரின் முயற்சிகளுக்கு, தற்போது நல்ல பலன்கள் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இலங்கை பாலாலியில் உள்ள, திருக்கேதீஸ்வரம் கோவிலில், தன் பிரம்மஹத்தி தோஷம் தீர்வதற்காக, ராமேஸ்வரம் செல்வதற்கு முன்னரே, ராமர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.
இக்கோவிலை, இந்திய மானியத்தில் புதுப்பித்ததன் வழியாக, நம் பண்டைய மரபுகளை, பழமையான உறவுகளை, நம் பிரதமர் மீட்டெடுத்துள்ளார். இப்பகுதிக்கு மீண்டும் ராமேஸ்வரத்தில் இருந்து, படகு சேவை விரைவில் துவக்கப்பட உள்ளது.
இலங்கை உடனான பாரம்பரியத் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில், அந்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை, பிரதமர் வழங்கி உள்ளார். அவர், 2015 மற்றும் 2017ல் இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டு பயணங்களும் வரலாற்று சிறப்புமிக்கவை; நிலையான தீர்வுகளுக்கு அச்சாரமிட்டவை.
தற்போது, இலங்கைத் தமிழர்களின் காயங்கள், மெல்ல குணமடைந்து வருகின்றன. வடக்கு மற்றும் மத்திய மாகாணத்தில் இந்தியா முன்னெடுத்த வளர்ச்சித் திட்டங்களில், பெரும்பாலானவை நிறைவடைந்துள்ளன; மற்றவை முடியும் நிலையில் உள்ளன.

காத்திருப்பு



இவை அனைத்தும், இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தையும், பொருளாதார வளத்தையும் ஏற்படுத்துகிறது.
இலங்கையின், வடக்கு மாகாணம், தற்போது இலங்கையின் பல பகுதிகளுடன் முறையாக இணைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண விமான நிலையத்தை வணிக மயமாக்க, 30 கோடி இலங்கை ரூபாயில் நிதியுதவி வழங்கப்பட்டது. யாழ்ப்பாண தமிழ் மக்களின், 40 ஆண்டு கால காத்திருப்பு, 2019ல் முடிவுக்கு வந்தது.
கடந்த 2017 ஜூன் மாதம், இலங்கை ரயில் துறையின் வளர்ச்சிக்காக, 26 ஆயிரத்து 394 கோடி ரூபாய் கடன் வசதியை, இந்தியா இலங்கைக்கு வழங்கியது.
இதன் காரணமாக, நாட்டின் பிற பகுதிகளுடன், துண்டிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கு, கொழும்பில் இருந்து 386 கி.மீ., நீள சொகுசு ரயில் சேவை, கடந்த ஆண்டு ஜனவரியில் துவக்கப்பட்டது.
வட மாகாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்த, 375 கோடி ரூபாய் உதவியை, இந்தியா நேரடியாக வழங்கியது. இங்கிருந்து காரைக்காலுக்கு விரைவில் படகு சேவை துவக்கப்பட உள்ளது.
மலையகத் தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும், மலை நகரமான நுவரெலியாவுக்கு, நம் பிரதமர் சென்ற பின், அவர்கள் நம்பிக்கை பெற்றனர். அங்கு தலா, 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 45 ஆயிரம் வீடுகள் கட்டி வழங்கப்பட்டன.

வலியுறுத்தல்



மேலும், மலையகத் தமிழர்களுக்கு, 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான திட்டமிடல் பணி நடந்து வருகிறது.
நம் பிரதமரின் ஆலோசனை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில், சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட யாழ் கலாச்சார மையம், நம் தமிழ் மொழியின் தொன்மையை பாரம்பரியத்தை மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை தமிழர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் இலங்கையின் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு, இலங்கை அதிபரை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இது தொடர்பான பல நல்ல செய்திகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டமிடல்



பிரதமரின் தனிப்பட்ட ஆர்வத்துடன் கூடிய பொறுப்பான திட்டமிடலால் மட்டுமே, இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், இந்தப் பிராந்தியத்தில் வலுவாக நிலவியிருந்த சீனத் தாக்கம், வெகுவாக அடங்கிப் போயிருக்கிறது.
இலங்கை மற்றும் இந்தியா இடையே, இரு தரப்பு -உறவுகளின் இரு கைகளும் இணையும் இணக்கமான சூழல் உருவாகி உள்ளது. இவை அனைத்தும் நம் இந்திய வம்சாவளியினருக்காக, பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட மனிதநேய வெளிப்பாடு.
கே. அண்ணாமலை
தமிழக பா.ஜ., தலைவர்



வாசகர் கருத்து (22)

  • venugopal s -

    நீங்கள் ரொம்ப லேட் அண்ணாமலை அவர்களே, இலங்கை தமிழர் விவகாரம் எல்லாம் இனிமேல் தமிழக அரசியலில் எடுபடாது. நீங்கள் இன்னும் அரசியல் பாடம் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டும்!

  • கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா

    மொதல்ல... இவனுங்க, நம் எதிரி சப்பமூக்குக்காரன் சீனா..காரன உள்ளார விட்டுவிட்டான்... அந்த இடத்தை பிடிக்க உங்க பாஸ் மோடிஜி... ஓசியிலயே தமிழன் பெயரைசொல்லி நிறைய கொடுக்குறாரு.... பாம்பை பாலூட்டி வளர்த்தாலும்... என்றைக்காவது ஒருநாள் அது பாலூத்தினவனையே கொத்தாம விடாது.... என்பதைப் போல என்றைக்கு இருந்தாலும், சிங்களவனுங்க நம்மள எதிர்க்காம விடமாட்டான்.... அவனுங்க வாயில் புத்தம்சரணம்கச்சாமி...ன்னு சொல்லிட்டே... சிறுசுருள்வாளை கைகளால் முதுகுக்குப் பின்னாடி ஒளித்து வைத்திருப்பான். அது சிங்களவனின் இயல்பு. அத்துடன், அந்த மண்ணில் பிறந்த தமிழன்...னு சொல்லிக் கொண்டாலும் அவனும் விஷம்தான்.... பாலைவனத்தில் பயிரா விளையும்... கள்ளிச் செடிதான்யா வளரும். அது மண்ணோட ராசி. அதுபோல, இலங்கை மண்ணில் உருவாகும் அனைத்தும் நம்நாட்டுக்கு எதிராகவே திரும்பும்.

  • N SASIKUMAR YADHAV -

    இந்த தொப்புள் கொடி உறவை அழிக்க துணைப்போன ஊழல்மிகு கான்கிராஸ் விஞ்ஞானரீதியான ஊழல்வாத தீயமுக கட்சிகளுக்குதான் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினார்கள் இந்த ஈவெ ராம்சாம் சொன்ன டமிலர்கள். ஒருவேளை கருநாநிதி சொன்னதுபோல சோற்றாலடித்த பிண்டங்கள்தானா டமிலர்கள்

  • duruvasar - indraprastham,இந்தியா

    ஆல் இன் ஆல் அப்புவை உடன் அழைத்துக்கொண்டு போயிருந்தால், ட்ரவிட மாடலில் வரலாற்றையே மாற்றி காண்பித்து உண்மை வரலாற்றை விளங்கியிருப்பார். பயங்கரமான பகுத்தறிவாளார் .

  • Ganesh Murali - Chennai,இந்தியா

    தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் பாலம் அல்லது ரயில் பாலம் அமைத்து விட வேண்டும். நமது பிரதமர் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இதை செய்தால் இரு நாடுகளும் வளம் பெரும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement