Load Image
Advertisement

திருமாவால் தைரியமாக சொல்ல முடியலையோன்னு 'டவுட்' வருதே!

வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன்:



முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம், கடலுக்குள் அமைப்பது குறித்து, மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாற்றுக் கருத்து தெரிவிப்பது தவறல்ல; 'எதிர்ப்பு தெரிவிக்கிறோம்' என்ற பெயரில், வன்மத்தை கக்குவது எந்த வகையிலும் ஏற்புடையதாக இல்லை.
டவுட் தனபாலு: 'பாம்பும் நோகக் கூடாது; பாம்பு அடிச்ச கம்பும் நோகக் கூடாது'ங்கிறது கிராமத்து சொலவடை உண்டு... அது போல, உங்களால, 'கடலுக்குள் சிலை வைத்தால், பாதிப்பு ஏற்படும்; மக்கள் வரிப்பணம் வீணாகும்' என, தைரியமாக சொல்ல முடியலையோன்னு, 'டவுட்' வருதே!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்:



தி.மு.க., அரசு கொண்டு வந்த மகளிருக்கு இலவச பஸ் பயணம், 'புதுமை பெண்' திட்டம்போன்றவை, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இலவச பயண திட்டத்தில் இதுவரை, 233 கோடியே, 71 லட்சம் முறை பெண்கள்,அரசு பஸ்சில் பயணம் செய்து உள்ளனர். நாள் ஒன்றுக்குசராசரியாக, 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்து வருகின்றனர்.

டவுட் தனபாலு: தி.மு.க., அமைச்சர்கள் இப்படி கணக்கு சொல்ல ஆரம்பித்து தான், மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி எல்லாத்தையும் உயர்த்தினாங்க... இப்போது, பஸ் டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்த போறாங்களோன்னு, 'டவுட்' வருதே!

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு:



2016 வரை அருந்ததியர் ஓட்டுகளில், 85 சதவீதம் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாகவே இருந்தது. அவர்கள், எம்.ஜி.ஆரை, தங்கள்சமூகத்தைச் சேர்ந்தவர்என்ற கண்ணோட்டத்தில் பார்த்தனர். ஆனால், 2016க்கு பின் நடந்த இரு தேர்தல்களிலும், இந்த சமுதாய மக்களின் ஓட்டுகளில், 85 சதவீதம் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பதிவாகி உள்ளன. வரும் தேர்தலில், 100 சதவீதமும்,தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.

டவுட் தனபாலு 'பகுத்தறிவு,சமூகநீதி'ன்னு வாய்கிழிய பேசுறவங்க தான், ஜாதி பார்த்து ஓட்டுக் கணக்கு போடுறாங்க; ஜாதி பார்த்து தான் வேட்பாளரை நிறுத்துறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!



வாசகர் கருத்து (3)

  • C.SRIRAM - CHENNAI,இந்தியா

    (ஊசிப்போன வெத்து ) குருமாவின் ஜம்பம் சனா தனம் பற்றி மட்டுமே உளறிக்கொட்டும் . சொந்த சின்னத்தில் நின்று வெற்றி பெறமுடியாத அரசியல் வியாதிக்கு ஜம்பம் ஒரு கேடு

  • HONDA -

    வழ வழ குழ குழ எதற்கு தைரியமா எதிர்க்கனும் தைரியம் இல்லையா ஒதுங்கிடனும்

  • Rajarajan - Thanjavur,இந்தியா

    அதுசரி. சமூக நீதி பேசும் அரசியலார், தங்கள் குடும்பத்தில் மட்டும் தாழ்த்தப்பட்ட பிரிவினரில் பெண்கொடுத்து பெண் எடுப்பதில்லையே ?? தங்கள் சமூகத்தை சேர்ந்த பிறருக்கு அரசியல் மற்றும் அரசு வேலைகளை விட்டுக்கொடுப்பதில்லையே ?? ஆனால், சமீபத்திய வாட்ஸாப்பில், ஒரு நபர், ஒரு பாலக்காடு பிராமண தமிழ் நடிகையிடம், அவர் நடிப்பு தொழிலை மற்றவருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என சம்பந்தமில்லாமல் உளறிக்கொட்டி, தரம் தாழ்ந்து கேட்டாரே ? அது ஏன் ?? இவையெல்லாம் என்ன சமூக நீதி ?? சமூக நீதி என்ற மூளை சலவையில், அடுத்தவர்களுக்கு மூளை குழம்பும் அளவுக்கு ஆக்கிவிட்டுள்ளனரே ??

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement