Load Image
Advertisement

இதயம் காக்கும் இதயங்கள்
அந்த அறுவை சிகிச்சை கூடத்திற்கு வெளியே ஒரே பரபரப்பு
காரணம் உள்ளே ஒரு ஏழை மாணவனுக்கு முக்கியமான இதய நோய் அறுவை சிகிச்சை நடந்து கொண்டு இருந்தது
நன்றாக படிக்ககூடிய ஏழை மாணவன் அவன், அவனது வளர்ச்சியில்தான் அந்த குடும்பத்தின் எதிர்காலமே அடங்கியுள்ளது

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மாணவனுக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டது ஆரம்பகட்ட சோதனைகளுக்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு என்பது முடிவாகியது
அரசு தரும் நிதியுதவியையும் தாண்டி சிகிச்சைக்கு செலவு செய்ய வேண்டியிருந்தது அதனால் என்ன நாங்கள் இருக்கிறோம் மாணவர் உயிர்தான் முக்கியம் என்று மாணவனின் சிகிச்சைக்கான செலவை ஏற்றதுடன் தரமான சிகிச்சையையும் வழங்கிய அமைப்புதான் ஹார்ட்ஸ் பார் ஹார்ட்ஸ் .
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, இனி மாணவனுக்கு ஆயுள் கெட்டி அவன் நார்மலான வாழ்க்கையை தொடரலாம்,, தனது தாய் தந்தையுின் கனவுகளை நிறைவேற்றலாம் என் சிகிச்சை வழங்கிய டாக்டர்கள் சொன்னபோது அவனது பெற்றோர்களை விட அதிகம் சந்தோஷப்பட்டவர்கள் ஹார்ட்ஸ் பார் ஹார்ட்ஸ் அமைப்பினர்தான்.
காரணம் இந்த அமைப்பினருக்கு இவன் நானுாறாவது பிள்ளை
ஆம் ஹார்ட்ஸ் பார் ஹார்ட்ஸ் தமிழில் சொல்வதானால் இதயங்களுக்காக இயங்கும் இதயங்கள் என்ற இந்த அமைப்பினரின் முழு நேர வேலை மன்னிக்கவும் முழு நேர சேவையே சிகிச்சைக்கு வழியில்லாமல் தவிக்கும் ஏழை எளிய குடும்பத்து குழந்தைகளின் இதய நோய் தீர்ப்பதுதான்.இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் ஸ்ரீமதிக்கு இப்போது 78 வயதாகிறது அரசு மருத்துவராக இருந்தபோது ஆறாயிரத்திற்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சைகளை செய்தவர் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து இப்போது இதய நோய் ஆலோசகராக உள்ளார்.
எப்போதும் ஏழைக்குழந்தைகளின் இதயத்தோடு உறவாடியவர் பணி ஒய்வுக்கு பிறகும் வீட்டில் ஒய்ந்து இருக்காமல் தனது அனுபவத்தையும் ஆற்றலையும் தொடர்ந்து ஏழைக் குழந்தைகளுக்கு சேவையாக வழங்க முடிவுசெய்தார் இவரது நல்ல உள்ளத்திற்கு மேலம் வலு சேர்க்கும் வகையில் முத்துக்குமரன்,டாக்டர்கள் விஜயசங்கர்,ரம்யா காஷ்யப்,ஜெயக்கரன்,ரிச்சி,ரம்யா முத்துக்குமார்,வரதராஜன்,விஸ்வநாதன்,சீனிவாசன்,நாராயணன் உள்ளீட்ட முப்பது பேர் கரம் கோர்த்தனர் அப்படி உருவானதுதான்ஹார்ட் ஸ் பார் ஹார்ட்ஸ் அமைப்பு
பணப்பற்றாக்குறை காரணமாக இதய நோய் சிகிச்சை பெறாமல் இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தருவதுடன் தொடர்ந்து கண்காணிப்பையும் வழங்குவதுான் இந்த அமைப்பின் சிறப்பாகும் இவர்களது மருத்துவ சேவையின் உண்மைத்தன்மை அறிந்து இது போன்ற குழந்தைகளுக்கான கூ;டுதல் செலவை நன்கொடையாளர்கள் வழங்கிவருகின்றனர்.
இதுவரை எங்கள் அமைப்பின் சார்பாக நானுாறு குழந்தைகளுக்கு வெற்றிகரமாக இதய நோய் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது அவர்களது எதிர்காலம் காரணமாக பெயர் விவரங்களை பொது வெளியில் வெளியிடுவது இல்லை காரணம் இதய நோய் குறித்து சமூகத்தில் நிறைய விழிப்புணர்வு தேவைப்படுகிறது .நல்ல உள்ளம் கொண்ட நன்கொடையாளர்கள் நிறைய பேர் முன்வந்தால் இன்னும் நிறைய நிறயை குழந்தைகள் பலன் பெறுவர்.
சென்னை மேற்கு மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்டர் வளாகத்தில் இயங்கிவரும் ஹார்ட்ஸ் பார் ஹார்ட்ஸ் அமைப்பினரை தொடர்பு கொள்வதற்கான எண்கள் :73388 61284,95660 48593.
-எல்.முருகராஜ்
-வாசகர் கருத்து (1)

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    அனைத்த்து நல்ல உள்ளங்களுக்கும் டாக்டர் ஸ்ரீமதி அவர்களுக்கும் பாராட்டுகள் .அனைவரையும் சென்னி சாய்த்து வணங்குகிறேன் .அனைவரும் நீண்ட ஆயுளுடன் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement